முடிவுக்கு வந்த சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதம்! ஆனாலும் போராட்டம் தொடரும்! அபிஜித் பதிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சோனம் வாங்சுக் உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றுக் கொண்டாலும் டெல்லியில் போராட்டம் தொடரும் என கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் சேருவதற்காக மே 3 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் லீக்கானதாக வந்த தகவலை அடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தேர்வு நடத்தப்பட்டது. மேலும் நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டதாக ராஜஸ்தானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

neet delhi

இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வான்சுக் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இந்த போராட்டம் 21 நாளை எட்டிய நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சோனம் மருத்துவமனையிலும் போராட்டத்தை தொடர்ந்தார்.

இதனிடையே உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்துமாறு மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சோனம் பழச்சாறு குடித்து தனது 26 நாள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

சோனம் வாங்சுக் உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டதால் டெல்லியில் சிஜேபி கட்சியின் போராட்டமும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சோனம் உண்ணாவிரத்தை கைவிட்டாலும் போராட்டம் தொடரும் என கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 26 நாட்களாக சோனம் நடத்திய உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது பெரும் நிம்மதி அளிக்கிறது. அவரின் அசாத்தியமான தைரியத்திற்கும் மாணவர்களுக்கான தியாகத்திற்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.

தனது உயிரைப் பணயம் வைத்து நம் நாட்டில் எழுச்சியை உண்டு செய்திருக்கிறார். அவரது உயிர் விலை மதிப்பற்றது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரையில் ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என அபிஜித் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+