கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. ஜந்தர் மந்தரில் குடிநீர் கட்! அத்துமீறும் போலீஸ்!
டெல்லி: சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி ஜந்தர் மந்தரில் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். இந்நிலையில், போராட்டக் களத்தில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை டெல்லி காவல்துறை துண்டித்துள்ளதாக 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) குற்றம் சாட்டியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகள் காரணமாக நாடு முழுவதும் மாணவர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

குறிப்பாக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்கிற அமைப்பு இந்த போராட்டை முன்னெடுத்திருக்கிறது. இந்நிலையில், இந்த போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியிருக்கிறார். இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே இந்த போராட்டத்தை கலைக்க.. ஜந்தர் மந்தரில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை போலீசார் கட் செய்திருப்பதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.
சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, ஜந்தர் மந்தரில் இருந்த குடிநீர் இணைப்பு மற்றும் கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகளை டெல்லி காவல்துறை அகற்றிவிட்டதாக சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
சோனம் வாங்சுக்கின் வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பலமுறை கோரிக்கை விடுத்தும், காவல்துறை ஒத்துழைக்க மறுப்பதாக திப்கே குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அடிப்படை வசதிகள் பறிக்கப்படுவது மனித உரிமை மீறல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயத் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, சோனம் வாங்சுக் மற்றும் போராட்டக்காரர்கள் ராஜ்ঘাட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.
கல்வி முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் லடாக்கின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சோனம் வாங்சுக் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications