டெல்லியில் இணைய சேவை இன்று இரவே முடக்கம்! கரப்பான் பூச்சி ஜனதா போராட்ட அறிவிப்பால் காவல்துறை ஆக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் 24 மணி நேரத்துக்கு இணைய சேவையை முடக்க உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் மற்றும் அதனை சுற்றியுள்ள 4 கிமீ பகுதியில் இணைய சேவை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நாளை சிஜேபி போராட்டம் அறிவித்து இருந்த நிலையில், பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் டெல்லி கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன, 27 ஆயிரம் போலீசார் பாதுகாப்புகாக குவிக்கப்பட்டுள்ளனர்.

CJP Delhi Protest Internet to be suspended around Jantar Mantar from 10 pm today

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தால் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது.

கடந்த 2 ஆம் தேதி மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. நேற்று பெங்களூர் சுதந்திர பூங்காவில் போராட்டம் நடைபெற்ற நிலையில், நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இதற்கு டெல்லி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

எனினும் சிஜேபி நாளை போராட்டம் அறிவித்துள்ளதால், டெல்லியில் 23 ஆயிரம் போலீசார் முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவ போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லிக்கு வரும் ரயில்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு 9 மணி முதல் டெல்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி முழுவதும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இன்று இரவு 10 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு மொபைல் இணைய சேவை முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் இணைய சேவை முடக்க டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

தலைநகர் டெல்லியின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் லாரி, டிரக் போன்ற பிற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் மனித முகம் காணும் நவீன ஏஐ கேமிராக்கள் மூலமாக டெல்லி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+