“எங்களது செல்போன்களை பலவந்தமாக பறித்தனர்.. ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்”- CJP சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாகவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றும் வருகிறது. இந்நிலையில், டெல்லி காவல் துறையினரால் சிஜேபி உயர்மட்ட தலைவர்களான அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

CJP Leader Saurav Das Alleges Phones Were Hacked or Cloned During Detention

அவர்கள் மூவரும் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்றே தகவல் தெரியாமல் இருந்த நிலையில் இன்று டெல்லி கண்டோன்மென்ட் சிறப்பு மாஜிஸ்திரேட் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் பிணையத்தொகை விதிக்கப்பட்டதுடன், ஒரு வருட காலத்திற்கு அமைதியை பேணிக் காக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் டெல்லியில் இன்று சிஜேபி நிர்வாகிகள் அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோர் செஉதியாள்ர்களைச் சந்தித்து, தங்கள் மீதான டெல்லி போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய சௌரவ் தாஸ், "எங்களைக் கடத்திச் சென்றபோது எந்த ஆவணப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் போல காவல்துறையினர் வந்து எங்களை அழைத்துச் சென்றனர்.

போராட்டக் களத்தில் காவல் துறையினர் எங்கள் செல்போன்களை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்தனர். ஆனால், அதற்கான பறிமுதல் ஆவணத்தை அவர்கள் வழங்கவில்லை. எங்கள் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது குளோன் செய்யப்பட்டிருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் எழுகிறது.

கடந்த காலங்களில் பிற சமூக செயல்பாட்டாளர்களுக்கு நேர்ந்ததைப் போலவே, பிற்காலத்தில் ஆதாரங்களாகக் காட்டுவதற்காக, போலியான ஆவணங்களையோ அல்லது பிற பொருள்களையோ எங்கள் சாதனங்களில் திணிக்கும் நோக்கத்துடன் அவர்கள் அவற்றை ஹேக் செய்திருக்கலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம். எங்கள் செல்போன்களின் பாதுகாப்பு அம்சங்கள் உடைக்கப்பட்டிருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+