நள்ளிரவில் மசூதி அருகே இறங்கிய புல்டோசர்.. கல்வீச்சு, கண்ணீர் புகை குண்டுகள்.. டெல்லியில் பதற்றம்
டெல்லி: டெல்லியின் ராம்லீலா மைதானம் அருகே உள்ள ஒரு மசூதி பகுதியில் ஆக்கிரமிப்புகள் நேற்று நள்ளிரவு அகற்றப்பட்டன. அப்போது ஏற்பட்ட வன்முறையில் குறைந்தது ஐந்து காவலர்கள் காயமடைந்தனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், திடீரென வன்முறை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி சையத் பாயிஸ் இலாஹி மசூதி மற்றும் துர்க்மான் கேட் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தை ஒட்டிய இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதை அகற்ற டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவிட்டிருந்த நிலையில், அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று நள்ளிரவு இடித்து அகற்ற அந்த இடத்திற்குச் சென்றனர்.

கற்களை வீசித் தாக்குதல்
சுமார் 300 மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதி மக்கள் திடீரெனக் கற்களை வீசித் தாக்க ஆரம்பித்தனர். இதனால், நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். அந்தளவுக்கு அங்கு நிலைமை மோசமானது. இதையடுத்து சில குடியிருப்பாளர்கள் காவலர்கள் மீதும் கற்களை வீசினர்.. இதனால் மோதல் மேலும் தீவிரமடைந்தது.
இது தொடர்பாகக் காவல் துறை மூத்த அதிகாரி நிதின் வால்சன் கூறுகையில், "சுமார் 25 முதல் 30 பேர் காவலர்கள் மீது கல் எறிந்தனர். இதில் ஐந்து காவலர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த நாங்கள் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினோம்.. அங்கிருந்த ஒரு திருமண மண்டபமும், மருந்தகமும் இடிக்கப்பட்டுள்ளன. மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காகவே இந்தப் பணி இரவில் நடத்தப்பட்டது. கல் எறிதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இங்கு நிலைமை 100 சதவீதம் கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார்.
போலீஸ் தீவிரம்
இந்த வன்முறை தொடர்பான வீடியோக்களை ஆய்வு செய்து, கல் எறிந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த காவலர்கள் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் சுமார் 30 புல்டோசர்கள், 50 லாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் இடிக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கிய நிலையில், வன்முறை ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கில் கடந்தாண்டு நவம்பரில் டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்து இருந்தது. அதாவது துர்க்மான் கேட் அருகிலுள்ள ராம்லீலா மைதானத்தில் 38,940 சதுர அடி பரப்பளவிலான ஆக்கிரமிப்புகளை மூன்று மாதங்களுக்குள் அகற்ற டெல்லி மாநகராட்சிக்கும் பொதுப்பணித் துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
ஆக்கிரமிப்புகள்
ஒரு திருமண மண்டபம், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் ஒரு தனியார் பரிசோதனை மையம் ஆகியவை ஆகியவை ஆக்கிரமிப்பு இடங்களில் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. மசூதியின் நிர்வாகக் குழுவோ அல்லது டெல்லி வக்பு வாரியமோ அந்த நிலத்திற்குச் சட்டப்பூர்வ உரிமையோ அல்லது ஆவணங்களோ சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து அந்த இடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
முதலில் கடந்த ஜனவரி 4ம் தேதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை மார்க் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் அங்குச் சென்றனர். அப்போது உள்ளூர் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையில், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், மாநகராட்சி மற்றும் வக்பு வாரியம் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கை ஏப்ரல் 22ம் தேதி ஒத்திவைத்தனர்.
டெல்லி மாநகராட்சி விளக்கம்
அந்தப் பகுதியில் 0.195 ஏக்கர் நிலம் பிப்ரவரி 1940ல் குத்தகைக்கு விடப்பட்டது உண்மை தான் என்று டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், குத்தகைக்கு விடப்பட்ட குறிப்பிட்ட 0.195 நிலம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்றும் அதைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளே அகற்றப்பட்டு வருவதாகவும் டெல்லி மாநகராட்சி விளக்கம் அளித்தது. மேலும், ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிகள் இன்னும் தொடர்ந்து நடந்து வருவதாகவும் பாதுகாப்பிற்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
பாபா வங்காவின் ரகசியக் குறிப்புகள்! ஜூன் 15 முதல் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் அந்த '5' ராசிகள்!












Click it and Unblock the Notifications