சாட்ஜிபிடி AI கிட்ட கேட்டு ஹாயாக ஹோம்வொர்க் எழுதிய மாணவன்! ஒரே ஒரு வரியால சிக்கியது எப்படி தெரியுமா?
டெல்லி: 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சாட்ஜிபிடியை பயன்படுத்தி வீட்டுப்பாடம் எழுதிய நிலையில் அது சரியாக இருந்த போதிலும் அவர் ஆசிரியரிடம் சிக்கியுள்ளார். இந்த சுவாரஸ்யமான சம்பவம் எப்படி நடந்தது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு. இந்த தொழில்நுட்பத்திற்கு வருங்காலத்தில் கிராக்கி அதிகம் என்பதால் பிளஸ் 2 முடித்தவர்கள் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவை எடுத்து படிக்கிறார்கள்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சாட்ஜிபிடி (ChatGPT) என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட் உருவாகியுள்ளது. இதன் மூலம் நாம் வைக்கும் கோரிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் விடை கொடுக்கும் வகையில் உள்ள ஒரு கருவியாகும்.

இந்த சாட்ஜிபிடியை வைத்து கடிதங்களை எழுதுவது, பள்ளி, கல்லூரிகளுக்கான கட்டுரைகள், கதைகள், அடிப்படையில் இசையை அமைப்பது போன்றவற்றை செயல்படுத்தலாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பல்கலைக்கழக மாணவர், 20 நிமிடங்களில் 2000 வார்த்தைகளை கொண்ட கட்டுரையை சாட்ஜிபிடி உதவியுடன் எழுதி அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தானாகவே சாட்ஜிபிடி மூலம் ஒரு இமெயில் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து வந்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அண்மையில் 7ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது ஆங்கில வீட்டுப்பாடத்தை எழுத செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியுள்ளார்.
அதை அவர் பயன்படுத்திதான் வீட்டுப்பாடத்தை எழுதினார் என்பதை ஆசிரியர் ஏதோ நேரில் இருந்து பார்த்தது போல் கண்டுபிடித்துவிட்டார். நாம் வீட்டுபாடத்தை வீட்டில்தானே எழுதினோம். யார் வாத்தியாரிடம் போட்டுக் கொடுத்திருப்பார்கள் என்ற சந்தேகத்துடன் இருந்திருந்தார். பின்னர்தான் தெரிந்தது ஈயடிச்சான் காப்பி போல் அவர் காப்பி அடித்த காரியம்தான் அவர் சிக்கியதற்கு காரணம்.
அதாவது கட்டுரையை எழுதிக் கொண்டே இருந்த அந்த சிறுவன் "As an AI language model, I dont have personal expectations or opinions" என்ற வாக்கியத்தையும் சேர்த்து எழுதிவிட்டார். இதை வைத்துத்தான் அந்த மாணவருடைய ஆசிரியர் அந்த மாணவர் சாட்ஜிபிடியை பார்த்து ஹோம்வொர்க் செய்துவிட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதை அறிந்த ஏ.ஆர்.ரஹ்மான் வருங்காலத்திற்கு வரவேற்கிறேன் என நகைச்சுவையாக ட்வீட் போட்டுள்ளார். இந்தியாவில் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வில் தோல்வியடைந்த சாட்ஜிபிடி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (MBA) திட்டத்தின் இறுதித் தேர்விலும், அமெரிக்க மருத்துவத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications