"க்ளீன் ஸ்வீப்.." கேரளாவில் "இந்தியா" கூட்டணி தான்.. அவ்வளவு முயன்ற பாஜகவுக்கு ஜீரோ தான்! புது சர்வே
டெல்லி: இடதுசாரிகள் ஆட்சியில் உள்ள கேரளாவில் மொத்தம் இருக்கும் 20 லோக்சபா தொகுதிகளையும் இந்தியா கூட்டணி அப்படியே அள்ளும் என்று இந்தியா டுடே மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுக்க இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் மேற்கொண்டு வருகிறது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன.

ஒரு பக்கம் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. மறுபுறம் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
லோக்சபா தேர்தல்: இதனால் இந்த இரு கூட்டணிகளுக்கும் இடையே லோக்சபா தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது. பொதுவாகவே இந்தியா கூட்டணிக்குத் தென்மாநிலங்களில் ஆதரவு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டூடே வெளியிட்டுள்ள மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பும் இப்போது அதையே காட்டுகிறது.
கேரளா: புதிதாக உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்குக் கேரளாவில் வலுவான ஆதரவு உள்ளதையே இது காட்டுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கேரளாவில் 20இல் 19 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. இதற்கிடையே இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணி 20/ 20 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் உள்ள 35,801 பேரிடம் டிசம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை எடுக்கப்பட்ட சர்வே அடிப்படையில் இந்த மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக் கணிப்பை இந்தியா டூடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வாக்கு சதவிகிதம்: கடந்த முறை கேரளாவில் யுபிஏ கூட்டணிக்கு 83 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில், இந்த முறை இந்தியா கூட்டணிக்கு வாக்கு சதவிகிதம் சற்று குறையலாம் என கூறப்படுகிறது. இந்தியா கூட்டணிக்கு இந்த முறை கேரளாவில் 78 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி: மறுபுறம், பாஜக தலைமையிலான என்டிஏ கேரளாவில் தன்னை நிலைநிறுத்தத் தீவிர முயற்சிகள் எடுத்த போதிலும் அதற்குப் பெரியளவில் பலன் இல்லை என்பதையே இது காட்டுகிறது. கடந்த தேர்தல் முடிவைப் போலவே, இந்த முறையும் கேரளாவில் பாஜக கூட்டணிக்கு எந்தவொரு இடமும் கிடைக்காது என்றே மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் பாஜகவின் வாக்கு சதவிகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக கேரளாவில் 15% வாக்குகளைப் பெற்ற நிலையில், இந்த முறை அவர்களுக்கு 19% வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல கேரளாவில் கடந்த 2021இல் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடதுசாரிகள் 91 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது எதிரணியில் இருந்து களமிறங்கிய காங்கிரஸ் கூட்டணிக்கு 47 இடங்கள் கிடைத்தன. மறுபுறம் அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜக கூட்டணியால் ஒரே ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications