Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்துக்கு வெளியே திமுகவால் ஒரு ஓட்டு வாங்க முடியுமா? ஸ்டாலின் மீது பியூஸ் கோயல் கடும் ‛அட்டாக்’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினால் தமிழ்நாட்டுக்கு வெளியே ஒரு ஓட்டின் மீது கூட எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக ‛அட்டாக்' செய்துள்ளார். மேலும் மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், லாலு பிரசாத், உத்தவ் தாக்கரே உள்ளிட்டவர்களையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ‛ஹாட்ரிக்' சாதனையுடன் மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருகிறது. அதேவேளையில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

CM Stalin cannot influence a single vote outside Tamil Nadu, Union Minister Piyush Goyal attacked opposition party meet

குறிப்பாக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பாஜகவுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மேலும் கடந்த மாதம் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்பட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆலோசித்தனர். இந்த கூட்டம் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக வரும் 13, 14 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் அது பாஜகவுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே தான் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் உள்பட பல பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். ஊழல்வாதிகள் அனைவரும் எந்த கொள்கையும் இன்றி தங்களை பாதுகாத்து கொள்ள ஓரணியில் திரள முயற்சிக்கின்றனர். இதனால் எந்த பயனும் இல்லை என விளாசி வருகின்றனர்.

இதற்கிடையே தான் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் பாஜகவை ஆதரிக்கும் என நம்புகிறேன். நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க இந்த சட்டம் இயற்றுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

ராஜஸ்தானை பொறுத்தமட்டில் முதல்வர் அசோக் கெலாட் அரசின் கொள்கைகளை மக்கள் விரும்பவில்லை. இதனால் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் கொண்டு வர மக்கள் முடிவு செய்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டணி என்பது ஊழல்வாதிகளின் கூட்டணியாக தான் உள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நிலையான ஆட்சியையும், ஊழல் இல்லா ஆட்சியையும் வழங்கி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளில் பங்கேற்ற கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியால் மேற்கு வங்கு மாநிலத்துக்கு வெளியே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.

திமுகவின் தமிழக முதல்வர் ஸ்டாலினாலும் தமிழ்நாட்டுக்கு வெளியே ஒரு ஓட்டு மீது கூட தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இதேபோல் தான் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோரால் பீகாருக்கு வெளியேயும், உத்தவ் தாக்கரேவால் மகாராஷ்டிராவுக்கு வெளியேவும் ஒரு ஓட்டு மீது கூட எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது'' என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+