கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடியிடம் கோரினேன்.. டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
டெல்லி: டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் பேட்டி
இதைத்தொடர்ந்து, இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது பேசிய அவர், "நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினேன். தமிழ்நாட்டுக்கு என்னென்ன தேவை என்பதை நிதி ஆயோக் கூட்டத்தில் பேசினேன்.
கோவையில் எய்ம்ஸ்
சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் ஆகிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி விடுவிக்க வலியுறுத்தினேன். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தினேன். நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்.
இலங்கை சிறைபிடித்துள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்க வலியுறுத்தினேன். கோரிக்கைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். கோரிக்கைகளை மோடி நிறைவேற்றுவாரா? இல்லையா? என்பதை பார்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில்
முன்னதாக நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் வரி வருவாயில், 50%-ஐ மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41% வரிப்பகிர்வு வழங்கப்படுவதில்லை. தற்போது 33.16% மட்டுமே மாநிலங்களுக்கு வரிப்பகிர்வாக வழங்கப்படுகிறது எனப் பேசியுள்ளார்.
மேலும், ஒருதலைப்பட்சமான நிபந்தனைகளை வலியுறுத்தாமல் SSA திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும். PM SHRI திட்டத்தில் கையெழுத்து போடாததால் நிதியை நிறுத்தி வைத்ததை சுட்டிக் காட்டி, நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
ஸ்டாலின் கோரிக்கை
மேலும், நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். 'அம்ருத் 2.O' திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவையாகும். இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
"சுத்தமான கங்கை" திட்டம் கங்கை நதியை மேம்படுத்துவதிலும், மீட்டெடுப்பதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. ஆறுகள் நமது நாட்டின் உயிர்நாடியாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்க இதேபோன்ற திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
ஆங்கிலத்தில்
இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள். 2047 ஆம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை பாராட்டத்தக்கது. என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு, மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியானது எப்போதும் போராடி - வாதாடி - வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்; இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து












Click it and Unblock the Notifications