லாக்டவுன் நீட்டிப்பு.. தமிழகத்தின் நிலை என்ன.. அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதை பாருங்க
டெல்லி: சமூக அவசரநிலை போன்ற சூழ்நிலை நிலவுவதால், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தின்போது தெரிவித்துள்ளார்.
Recommended Video
எனவே ஊரடங்கு உத்தரவு அதாவது லாக்டவுன் நீட்டிப்பு நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை பாருங்கள்:
மக்களுக்காக எந்த ஒரு முடிவாக இருந்தாலும் சரி, அதை தமிழக அரசு ஏற்று நடக்கும். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, சமூக பரவலை பராமரிப்பது மட்டும் தான் ஒரே வழி. இதுதான் அவசியமாகும்.

முதல்வர் முடிவு
தமிழகம் எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கும் என்பது பற்றி முதல்வர் அறிவிப்பார். ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் ஒவ்வொரு மோசமான வைரஸ் தாக்குதல் உலகை ஆட்டிப் படைத்து உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று நோயாக இல்லாமல் பெரும் தொற்றுநோயாக மாறிவிட்டது. ஆனால் பலரும் தினமும் உழைத்து சாப்பிட கூடிய நிலைமையில் இருக்கிறார்கள். எனவேதான் தமிழக அரசு அவர்களுக்கு உதவ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

உதவித் தொகை
ரேஷன்கார்டுதாரர்களுக்கு, தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கி உள்ளோம். இது போன்ற ஒரு சூழ்நிலையில் 80% மக்களுக்கு உதவி சென்று சேர்ந்ததே பெரிய விஷயம்தான். 100 சதவீதம் மக்களுக்கும் உதவி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விவசாயம்
அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பிஆர் பாண்டியன் கூறியதாவது: சமூக விலகலையும், லாக்டவுனையும், ஏற்றுக் கொள்வது மட்டும்தான் இப்போதைக்கு ஒரே மருத்துவ முறையாக உள்ளது. எனவே அதை எட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். விவசாயிகள் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த மக்களும் உணவுக்காக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆன்லைன்
உற்பத்தி செய்யப்பட கூடிய பொருட்களை உரிய விலை கொடுத்து வாங்குவதற்கு ஆன்லைன் சூதாடிகள் தயாராக இல்லை. சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அடிமாட்டு விலைக்கு கொள்முதல் நடக்கிறது. ஒரு மூட்டை நிலக்கடலை 2500 ரூபாய்க்கு போனவாரம் விற்பனை செய்யப்பட்டது. இப்போது, 1000, 1200 என்ற அளவுக்கு வந்துள்ளனர். 500 ரூபாய்க்கு விற்க வேண்டிய வாழைத்தார் 50 ரூபாய்க்கு விற்க தள்ளப்பட்டுள்ளது. அந்த இழப்பை யார் ஈடு கட்டுவார்கள் என்பதுதான் இப்போதைக்கு கேள்வி. இவ்வாறு பிஆர் பாண்டியன் தெரிவித்தார்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications