CNN News18 டெல்லி எக்ஸிட் போல் முடிவுகள்: தலைநகரில் பாஜக ஆட்சி.. காங்கிரஸுக்கு பூஜ்ஜியம்?
டெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சி.என்.என் - நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 40 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 30 இடங்களிலும் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல வாய்ப்பில்லை எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் டெல்லி மக்கள் இன்று வாக்களித்து உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. டெல்லி தேர்தல் முடிவுகள் வரும் பிப்ரவரி 8 சனிக்கிழமை அன்று அறிவிக்கப்படும் நிலையில், டெல்லி வாக்காளர்களின் நாடித்துடிப்பை அறிய முயன்ற எக்ஸிட் போல் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

டெல்லி சட்டமன்றத் தேர்தல்
டெல்லியை பொறுத்தவரை 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 83.76 லட்சம் ஆண் வாக்காளர்கள், 72.36 லட்சம் பெண் வாக்காளர்கள் மற்றும் 1,267 திருநங்கை வாக்காளர்கள். இவர்களில் இன்று 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன், டெல்லி மக்களின் மனநிலை என்ன என்பதைக் காட்டும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, வாக்குப்பதிவு முடிந்த அரை மணி நேரத்திற்குப் பிறகு வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடலாம். டெல்லி வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் மாலை 6:30 மணி முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.
CNN - நியூஸ் 18 எக்ஸிட் போல்
அதன்படி, சி.என்.என் - நியூஸ் 18 (CNN News18) நடத்திய கருத்துக் கணிப்பின்படி, டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 30 இடங்களிலும் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல வாய்ப்பில்லை என சி.என்.என் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில்
கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையைப் பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கணித்தன. இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா, ஆம் ஆத்மிக்கு 59-68 இடங்களை கணித்தது. நியூஸ் எக்ஸ்-நேதா, ஜன் கி பாத் மற்றும் இந்தியா நியூஸ் நேஷன் ஆகியவை ஆம் ஆத்மிக்கு 55 இடங்கள் கிடைக்கும் எனக் கணித்தன.
2020 சட்டமன்றத் தேர்தலில் டெல்லி எக்ஸிட் போல்கள் துல்லியமாக நிரூபிக்கப்பட்டன. ஏனெனில் ஆம் ஆத்மி 62 இடங்களை வென்றது, பாரதிய ஜனதா கட்சி 8 இடங்களை வென்றது. தேசிய தலைநகரில் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications