அமேதியிலும் நிச்சயம் ராகுல் வெல்வாராம்.. அப்போ பிரியங்காவும் எம்பியாகிவிடுவார் போல!
டெல்லி: அமேதி தொகுதியில் ராகுல் காந்தி நிச்சயம் வெல்வார் என சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று முன் தின் வெளியானது. இதில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் பெரும் இழுபறி இருக்கும் என கூறுகிறது.
இந்த போட்டியில் ராகுல் காந்தியே வெல்வார் என்று சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. ராகுல் காந்தி தனது தந்தையின் தொகுதியான அமேதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.
இவர் அமேதி மட்டுமில்லாமல் வயநாட்டிலும் போட்டியிட்டுள்ளார். ராகுலுக்கு டஃப் கொடுக்க பாஜக ஸ்மிருதி இரானியை அமேதியில் நிறுத்தியுள்ளது. ஸ்மிருதியோ தான் போட்டியிடுவதால் நிச்சயம் தோல்வியை சந்திப்போம் என்பதாலேயே ராகுல் வயநாட்டில் போட்டியிட்டுள்ளார் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பிரியங்கா காந்தியை கட்சிக்குள் நேரடியாக கொண்டு வந்தாகிவிட்டது. அரசியலுக்கு கொண்டு வர அவர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸோ பக்கா வியூகம் வகுத்துவிட்டது. அதாவது அமேதியிலும், வயநாட்டிலும் போட்டியிடும் ராகுலின் அமேதி வெற்றி நிச்சயமான ஒன்று.
எனவே வயநாட்டிலும் ராகுல் வெற்றி பெற்றுவிட்டால் அமேதி தொகுதியை ராஜினாமா செய்து விடுவார் ராகுல். அப்போது அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை நிறுத்தினால் எளிதில் வெற்றிக் கனியை பறிக்க முடியும் என்பது காங்கிரஸின் கணக்கு.
இந்த நிலையில் கருத்து கணிப்புகளும் ராகுல் காந்தி அமேதியிலும் வயநாட்டிலும் வெற்றி பெற்றுவிடுவார் என கூறுவதால் பிரியங்காவும் அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்றே காங்கிரஸ் கட்சியினர் நம்புகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications