கரப்பான்பூச்சியோட செல்பியா... ரூம் போட்டு யோசிப்பாங்களோ!
கரப்பான்பூச்சியோடு செல்பி எடுக்கும் சவால் இணையத்தில் வைரலாகியுள்ளது.
டெல்லி: கரப்பான் பூச்சியை முகத்தில்விட்டு போட்டோ எடுத்து பதிவிடும் புதிய சவால் தற்போது இணையத்தில் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே இந்த சவால் வைரலாக பரவி வருகிறது.
ஏனென்றே தெரியவில்லை, ஆனால் கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே பல பெண்களுக்கு அலர்ஜி தான். ஒருவேளை சினிமாக்களில் நாயகிகளின் ரியாக்சனைப் பார்த்து கரப்பான்பூச்சி அருவருப்பு வந்து விட்டதா எனத் தெரியவில்லை.
இந்நிலையில், கரப்பான்பூச்சியை வைத்து சுவாரஸ்யமான சவால் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

கரப்பான்பூச்சி சவால்:
மியன்மர் நாட்டைச் சேர்ந்த ஆங் எனும் இளைஞர் தான் முதன்முதலில் இந்த சவாலை ஆரம்பித்து வைத்தார். கடந்த ஏப்ரல் 20ம் தேதி ஆங் தனது முகத்தில் ஒரு கரப்பான் பூச்சியை ஓடவிட்டு அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் அப்லோட் செய்தார். மற்றவர்களுக்கும் அவர் சவால்விட்டார்.

வாய்க்குள் வைத்து:
ஆங்கின் சவாலை ஏற்று, இளைஞர்கள் பலர் தங்களுடைய முகத்தில் கரப்பான் பூச்சியை ஓடவிட்டு அதனை புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். சிலர் உச்சத்துக்கு சென்று, தங்களுடைய வாய்க்குள் கரப்பானை வைத்து போட்டோ எடுத்துப் போடுகின்றனர்.

டிவிட்டரிலும் வைரல்:
முதலில் பேஸ்புக்கில் ஆரம்பித்த இந்த சவால், தற்போது டிவிட்டருக்கும் பரவிவிட்டது. டிவிட்டரிலும் பலர் இதுபோன்று புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக மியான்மர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இந்த சவால் மிகவும் பிரபலமாகிவுள்ளது.

வைரல்:
சமூகவலைதளங்களில் ஐஸ் பக்கெட் சாலஞ்ச், கிகி சாலஞ்ச் உள்பட இது மாதிரி அவ்வப்போது ஏதாவது ஒரு சவால் பிரபலமாவது வழக்கம் தான். ஆனால், பூச்சியை முகத்தில் விட்டு, அதனை புகைப்படம் எடுத்து என கொஞ்சம் டெரராக இருக்கிறது இந்த சவால். பெரும்பாலும் இந்த போட்டியில் ஆண்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications