கைகோர்க்கும் காங்கிரஸ் - கரப்பான் பூச்சி ஜனதா.. இதுவரை இல்லாத திருப்பம்.. எல்லாம் மாறுதே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், முதல்முறையாக இந்தியா கூட்டணி நடத்தும் போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவளித்துள்ளது. இதுவரை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தனியாகவே போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், முதல்முறையாக அரசியல் கட்சிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன.

நாடு முழுக்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் ஒரு பக்கம்.. கரப்பான் பூச்சி கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் ஒரு பக்கம் என போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. இது மத்திய அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது.

Cockroach Janata Party

ஒரே போராட்டமாக மாறுகிறது!

இதுவரை இந்த போராட்டங்கள் தனித்தனியாகவே நடந்து வந்தன. இருப்பினும், தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் என்பது தனித்தனி போராட்டங்கள் இல்லை என்றும் அனைவரும் ஒன்றாக இணைந்து நடத்தும் ஒரே போராட்டம்.. அவை வெவ்வேறு களங்களில் மட்டுமே நடக்கிறது என ராகுல் காந்தி கூறியிருந்தார். அவர் கூறியது போலவே அனைத்து எதிர்ப்புகளும் ஒரே போராட்டமாக மாறி வருவதற்கான அறிகுறி தெரிய ஆரம்பித்துள்ளது.

அதாவது காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வரும் நவம்பர் 1ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டத்தை அறிவித்திருந்தது. இந்த பேரணிக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இப்போது தனது ஆதரவை தெரிவித்துள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஆதரவு

"நாட்டை விட எதுவும் பெரியதல்ல!" என்று சொல்லி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அபிஜீத் டிப்கே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கை, மக்கள் தங்கள் அரசை தேர்ந்தெடுப்பதுதான், அரசு தனக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுப்பது ஜனநாயகம் இல்லை. SIR நடவடிக்கை மூலம் இந்த அடிப்படை கொள்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை மேற்பார்வையிடுவதற்கு தேவையான நம்பிக்கையை ஞானேஷ் குமார் இழந்துவிட்டார். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும் சுதந்திரத்தையும் மீட்டெடுக்க அவர் பதவி விலகுவது அவசியம். எனவே நாட்டில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் அனைத்து அமைப்புகளுக்கும் இதற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பது அவசியம்" என்றார்.

தனித்தனி போராட்டங்கள்

கடந்த சில வாரங்களாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் காங்கிரஸும் ஞானேஷ் குமாருக்கு எதிராக தனித்தனியாக போராட்டங்களை நடத்தி வந்தன. அதற்கு முன்பாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நீட் வினாத்தாள் லீக் விவகாரங்களை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. அப்போதும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

எல்லாம் மாறுதே

முன்னதாக அக்டோபர் 10ம் தேதி டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. அந்த போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, திமுக என பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவளித்திருந்த போதிலும், காங்கிரஸ் மட்டுமே ஆதரவளிக்காமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் காங்கிரஸ் போராட்டத்திற்கு இப்போது கரப்பான் பூச்சி ஜனதா ஆதரவளித்துள்ளது. இருப்பினும், அந்த அமைப்பின் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்களா என்பது உறுதியாக தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+