ஸ்டாலின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கம்! கரப்பான் கட்சி பாய்ச்சல்! தொடங்கும் மெகா போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியும் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கிடையே ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் அந்த தொகுதிகளில் ஏற்பட்ட தேர்தல் வெற்றி-தோல்வி வித்தியாசம் குறித்து கரப்பான் பூச்சி கட்சி போட்ட போஸ்ட் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சுற்றியுள்ள சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் ஆணையத்துக்குள் இரண்டு தேர்தல் ஆணையர்கள் எழுப்பிய ஆட்சேபனைகள் ஒருபுறம் பேசுபொருளாகியுள்ள நிலையில், மறுபுறம் கரப்பான் பூச்சி கட்சியும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

Cockroach janata party

கரப்பான் பூச்சி ஜனதா

ஞானேஷ் குமார் பதவி விலக நேற்று வரை கெடு விதித்திருந்த நிலையில், அந்த காலக்கெடு முடிந்துவிட்டுத. இதையடுத்து அக்டோபர் 2ம் தேதி முதல் அங்கு மும்பையில் தொடங்கி நாடு முழுக்க போராட்டத்தை நடத்த போவதாக கரப்பான் பூச்சி கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக இரு நாட்களுக்கு முன்பு கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போதே எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து கரப்பான் பூச்சி கட்சி குற்றஞ்சாட்டியிருந்தது.

இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சி இன்று போராட்டம் தொடர்பாக போஸ்ட்டை பதிவிட்டிருந்த நிலையில், அதிலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களின் தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையையும், அந்தத் தொகுதிகளில் ஏற்பட்ட தேர்தல் வெற்றி-தோல்வி வித்தியாசத்தையும் ஒப்பிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஸ்டாலின்

மேற்கு வங்கத்தின் பவானிபூர் தொகுதியில் சுமார் 51,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், அங்கு மம்தா பானர்ஜி சுமார் 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகவும் கரப்பான் ஜனதா கூறியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில், அவரது சுமார் 9,000 வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளார். மேலும், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதியில் சுமார் 40,000 வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், அங்கு அவர் சுமார் 4,000 வாக்குகளில் தோல்வி அடைந்ததாக கரப்பான் ஜனதா கூறுகிறது.

முக்கிய வாதம்

இவை வெறும் தற்செயல் நிகழ்வுகளாக பார்க்க முடியாது என்பதே கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே முன்வைக்கும் வாதமாக உள்ளது. குறிப்பாக 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஒருங்கிணைந்து போட்டியிட்ட தலைவர்கள் மட்டும் தோல்வி அடைந்துள்ளதாகவும் அதுவும் அந்த தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இந்த பிரச்சினையின் மையக்கரு. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சில அதிர்ச்சி ரிப்போர்ட்கள் வெளியாகி இருந்தது. அதில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை தேர்தல் பட்டியல், புதிய வாக்காளர்களை சேர்ப்பது, பெயர்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் தொடர்பாக ஆட்சேபனைகளை பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம்

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதை வலியுறுபத்தி வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டன. டெல்லி, ஜம்மு, கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடந்தன.

விளக்கம்

ஆனால் தேர்தல் ஆணையத்துக்குள் பிளவு என்பதை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மாறுபட்ட கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிப்பது வழக்கமான நடைமுறை தான் என்றும் முக்கிய முடிவுகள் அனைத்தும் மூன்று தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலுடனேயே எடுக்கப்பட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+