"மோடி அரசு முடிவுக்கு வர போகிறது.. எமர்ஜென்சி காலத்தையே மிஞ்சிவிட்டது!" பாயும் கரப்பான் பூச்சி கட்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளை கண்டித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, மத்திய அரசுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள், எமர்ஜென்சி காலத்தையே மிஞ்சிவிட்டதாகவும் கரப்பான் பூச்சி கட்சி விமர்சித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் இப்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் கரப்பான பூச்சி கட்சி நேற்று போராட்டத்தை அறிவித்திருந்தது. இருப்பினும், போராட்டத்திற்கு முன்பே அதன் தலைவர்களை போலீசார் கைது செய்தனர். இருப்பினும், இன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் அவர்களை விடுவித்து உத்தரவிட்டது.

Cockroach Janata Party Modi India

கரப்பான் பூச்சி கட்சி

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிரதமர் மோடியை சர்வாதிகாரி என்று விமர்சித்த கரப்பான் பூச்சி கட்சி, போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்ட விதம் மற்றும் போலீசாரின் நடவடிக்கைகள் குறித்தும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

டெல்லியில் போராட்டங்கள் தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு பொதுமக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் எதிராக போரில் ஈடுபடுவதை போலச் செயல்படுவதாக கரப்பான் பூச்சி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கைகளையும், கைது செய்யப்பட்டவர்கள் நடத்தும் விதத்தையும் கரப்பான் பூச்சி கட்சி விமர்சித்துள்ளது.

மோடி அரசு முடிவுக்கு வர போகிறது

கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகி சௌரவ் தாஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "தற்போதைய ஆட்சி முடிவுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது. அரசு தனது கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்துவிட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை காப்பாற்றுவதற்காகவே அரசு செயல்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்ட தலைமை தேர்தல் ஆணையர் தான் உண்மையான தேச விரோதி.

எங்கள் 3 பேரையும் விமானத்தில் இருந்து நேரடியாக போலீசார் கடத்தினர். அப்போதும் கூட எங்களை ஒரே இடத்தில் வைக்கவில்லை. என்னை ஆர்.கே. புரத்தில் வைத்திருந்தனர். அசுதோஷ் ரங்கா மற்றும் அபிஜீத் டிப்கே ஆகியோர் வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்தனர். இப்படி மூவரையும் தனித்தனியாகவே வைத்திருந்தனர், செல்போனை பறிமுதல் செய்துவிட்டனர். அதை ஆய்வு செய்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அல்லது அவர்களுக்கு ஏதுவான ஆதாரங்களை திணித்திருக்கலாம்.

உச்ச நீதிமன்றம்

போராட்டக்காரர்கள் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரிக்க வேண்டும். ஒரு பக்கம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்குகளைப் பதிவு செய்து வரும் நிலையில், பாஜக வலதுசாரி அமைப்புகளை திரட்டி வருகிறது" என்றார்.

போர் சூழல்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று கரப்பான் பூச்சி கட்சியின் நிர்வாகி அசுதோஷ் ரங்கா தெரிவித்துள்ளார். அவர் மேலும், "தலைநகர் டெல்லியில் தேவையில்லாமல் போலீசார் குவிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.. இங்கு நகரம் முழுக்க போர் சூழல் நிலவுகிறது. இதற்காக பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வெட்கப்பட வேண்டும். நேற்று எங்களை தடுப்பு காவலில் கைது செய்தனர். ஆனால், எங்களை வழக்கறிஞர்களிடம் பேச கூட டெல்லி போலீசார் அனுமதிக்கவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+