டெல்லி ஜந்தர் மந்தர் 2.0! நாடு முழுவதும் இருந்து திரள்வோம்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் நாடு முழுவதிலும் இருந்து டெல்லி மற்றும் ஜந்தர் மந்தரை நோக்கி வரும் 10 ஆம் தேதி அணி திரள்வோம் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் ஆப்ஜித் தீப்கே எச்சரிக்கை தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி மும்பையில் சிஜேபி போராட்டம் நடத்திய நிலையில் ஆப்ஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறது. எஸ்ஐஆர் எனப்படும் இந்த பணிகளை மேற்கொள்ளும் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையருக்கும் பிற ஆணையர்களுக்கும் இடையே கருத்து முரண் எழுந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

Apjit Deepke Cockroach Janata Party Gyanesh Kumar

தன்னிச்சையாக தலைமை தேர்தல் ஆணையர் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்துள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்துள்ள நிலையில், இளைஞர்களின் பட்டாளத்தை கொண்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதாவும் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.

காந்தி ஜெயந்தியான நேற்று மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். மாலை 4 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கிய நிலையில், காலையில் இருந்தே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால் மும்பை போலீசார் தாதர் மற்றும் சேனா பவன் பகுதிகளில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை முடக்கினர்.

எனினும், போலீசாரின் தடுப்புகளை மீறி இளைஞர்கள் முன்னேறி வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே, தைரியம் இருந்தால் எங்களை கைது செய்து பாருங்கள் என தேவேந்திர பட்னாவிஸ்க்கு சவால் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய ஆப்ஜித் தீப்கே, "தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்யாவிட்டால் நாடு முழுவதிலும் இருந்து டெல்லி மற்றும் ஜந்தர் மந்தரை நோக்கி வரும் 10 ஆம் தேதி அணி திரள்வோம் என்று எச்சரித்துள்ளனர். டெல்லி போலீஸ் எங்களை தடுத்து நிறுத்தினால் எங்கே நிறுத்தப்படுகிறோமோ அதுவே எங்களின் ஜந்தர் மந்தராக அமையும். போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும். மகாத்மா காந்தியின் வழியில் பின் தொடர்வோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+