கரப்பான் பூச்சி கட்சியில் பிளவு! தனியாக CJP-D கட்சியை தொடங்கிய முன்னாள் நிர்வாகி! பரபர குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரப்பான் பூச்சி கட்சி கடந்த மாதம் நடத்திய போராட்டம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே அந்த அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. அபிஜீத் திப்கே தலைமையிலான கரப்பான் பூச்சி கட்சியில் இருந்த நிர்வாகி மணீஷ் பிரம்மபட் என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக இப்போது புதிதாக கரப்பான் பூச்சி கட்சி- ஜனநாயகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

கடந்த மாதம் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் டெல்லியில் போராட்டம் நடந்தது. நீட் முறைகேடுகளுக்கு எதிராக நடந்த இந்த போராட்டத்திற்கு நாடு முழுக்க ஆதரவு கிடைத்தது. இதையடுத்து மத்திய அரசு பின்வாங்கியது. கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த நிலையில், மேலும் சில வாக்குறுதிகளையும் மத்திய அரசு கொடுத்திருந்தது.

Cockroach Janata Party India CJP

இரண்டாக உடைந்த கட்சி

அதன் பிறகும் கரப்பான் பூச்சி கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சியில் இருந்து விலகிய நிர்வாகி மணீஷ் பிரம்மபட் என்பவர் கரப்பான் பூச்சி கட்சி- ஜனநாயகம் (Cockroach Janata Party-Democratic) என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கரப்பான் பூச்சி கட்சி தலைமை போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய தன்னார்வலர்களை ஓரங்கட்டிவிட்டு, இளைஞர்களின் இயக்கத்தை அரவிந்த் கெஜ்ரிவாலை மையமாகக் கொண்ட டீம் கெஜ்ரிவால் போல மாற்றிவிட்டதாக மணீஷ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அபிஜீத் திப்கே தரப்பு எந்தவொரு விளக்கமும் வெளியிடப்படவில்லை.

என்ன நடந்தது

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் கரப்பான் பூச்சி கட்சியின் முக்கிய குழுவினர் அபிஜீத் திப்கே வீட்டில் ஆலோசனை நடத்துவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, குஜராத்தை சேர்ந்த இந்த மணீஷ் பிரம்மபட் சத்ரபதி சம்பாஜிநகருக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தனது நண்பர் ராகுல் பாண்டியாவுடன் இணைந்து திப்கே வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற தன்னார்வலர்கள் திட்டமிட்டு விலக்குவதாக குற்றம்சாட்டினர். போராட்டத்தின்போது உடல்நிலை மோசமடைந்ததால் இருவரும் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னணி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சிலரை கரப்பான் பூச்சிகள் எனவும் உட்டுண்ணிகள் எனவும் கூறியிருந்தார். அவரை பொதுவாக அனைத்து இளைஞர்களையும் அப்படி சொல்லவில்லை. பொதுநல வழக்குகள் தொடர்பான விவகாரத்தில் சிலரை மட்டுமே குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த தகவல் தவறாக பரவவே மே 16ஆம் தேதி அபிஜீத் திப்கே கரப்பான் பூச்சி கட்சியை ஒரு நையாண்டி ஆன்லைன் இயக்கமாக தொடங்கினார்.

பின்னர் அது இளைஞர்களை உள்ளடக்கிய ஒரு இயக்கமாக வளர்ந்தது. வேலைவாய்ப்பின்மை, வினாத்தாள் லீக், கல்வி அமைப்பில் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கரப்பான் பூச்சி கட்சி எழுப்பியது. இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் இருந்து தான் இப்போது புதிதாக கரப்பான் பூச்சி ஜனநாயக கட்சி உருவாகியுள்ளது.

குற்றச்சாட்டு

டெல்லியில் வியாழக்கிழமை CJP-D அமைப்பை தொடங்கி வைத்த மணீஷ் பிரம்மபட், "உண்மையான கரப்பான் பூச்சி கட்சி, மக்களின் போராட்டத்தில் இருந்து உருவான இயக்கமாக இருந்தது. ஆனால் பின்னர் அது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்காக உழைக்கும் குழுவாக மாறிவிட்டது. மாணவர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த மக்களின் பிரச்சனைகளுக்காக போராடுவதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. பாஜகவுக்கு எதிராக செயல்படுவது மட்டுமே அவர்களின் நோக்கமாக உள்ளது. கரப்பான் பூச்சி கட்சியின் தேசிய குழுவில் இடம்பெற்றுள்ள 8 பேருக்கு ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்பு இருக்கிறது" என்று சாடினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+