சாதி வேண்டாம்.. பொருளாதார இட ஒதுக்கீடு வேண்டும்! கரப்பான் பூச்சி கட்சிக்கு போட்டியாக நடந்த போராட்டம்
டெல்லி: சாதியை அடிப்படையாக கொண்டு அரசின் உதவிகளை வழங்குவதற்கு பதிலாக, ஒருவரின் பொருளாதார நிலையை அடிப்படையாக கொண்டு அரசு உதவிகள் மற்றும் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமை ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரப்பான் பூச்சி கட்சியினருக்கு எதிராகவே இந்த போராட்டம் நடத்தப்படுவது போல இருந்தது.
இந்த காலகட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் மத்திய அரசு மிக பெரிய சிக்கலில் இருக்கிறது. ஏற்கனவே நீட் லீக் விவகாரம் தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சியினர் டெல்லியில் போராட்டத்தை நடத்தியிருந்தனர். இதற்கிடையே இப்போது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

போராட்டம்
இது தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது "இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் இருக்கக்கூடாது.. ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும்" என்ற கோஷங்களையும் எழுப்பினர். மாணவர்களுக்கு கல்வி உதவி, கட்டண சலுகை, போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி உள்ளிட்ட அரசின் உதவிகள் சாதியின் அடிப்படையில் இல்லாமல்.. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், பல்கலைக்கழகங்களில் சாதி பாகுபாட்டை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள யுஜிசியின் புதிய விதிகளுக்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விதிமுறைகள் குறித்து ஏற்கனவே மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மத்தியில் விவாதம் எழுந்துள்ள நிலையில், தற்போது ஜந்தர் மந்தர் போராட்டத்திலும் அது முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
வன்கொடுமை எதிர்ப்பு சட்டம்
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வன்கொடுமை எதிர்ப்பு சட்டத்தையும் எதிர்த்தனர். இந்த சட்டத்தின் பலன்கள் எப்போதும் மிகவும் பின்தங்கிய மக்களை சென்றடைவதில்லை என்றும், சில நேரங்களில் தனிநபர்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதில் தேவையான மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் அளவுகோலை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகள் தொடர்பான தற்போதைய கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் சொல்வது என்ன!
இது தொடர்பாக சிலர் கூறுகையில், "பொருளாதார ரீதியாக பலவீனமானவர்களுக்கு அரசு உதவி வழங்கக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. உதவி உண்மையில் தேவைப்படுபவர்களை சென்றடைய வேண்டும். கல்வி உதவித்தொகை, கட்டணச் சலுகை, போட்டி தேர்வு பயிற்சி போன்றவற்றை அவர்களின் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு வழங்க வேண்டும்" என்று போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் தெரிவித்தார்.
கரப்பான் பூச்சி ஜனதா
கடந்த மாதம் தான் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தில் இறங்கியிருந்த நிலையில், அதற்கு நேர் எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது. கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் நீட் லீக் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் இடதுசாரி கருத்துகளை கொண்டவர்களாகவே இருந்தனர். இந்த சூழலில் தான் அதற்கு நேர் எதிராக டெல்லியில் போராட்டம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதேநேரம் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. நாட்கள் செல்ல செல்ல மக்கள் ஆதரவும் அதிகரித்தது. நாடு முழுக்க இருந்து உணவுகளும் ஆர்டர் செய்யப்பட்டன. இருப்பினும், இந்த போராட்டம் ஒரு நாள் மட்டுமே நடந்தது. மாலை வரை மட்டுமே போராட்டம் நடந்தது.


Click it and Unblock the Notifications
