அக்டோபர் 2 அதிரபோகுது மும்பை.. ஞானேஷ்குமாருக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்
டெல்லி: எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்துள்ள புகார் தேசிய அரசியலை அதிர வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் 2 ஆணையர்களே எஸ்ஐஆர் பணிகளில் மோசடி நடைபெற்றதாக போர் கொடி தூக்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை தீவிரமாக எதிர்த்து போராடுகின்றன. ஞானேஷ்குமார் 48 மணி நேரத்தில் பதவி விலக கரப்பான் பூச்சி அவகாசம் கொடுத்தது. அவர் பதவி விலகாததால் கரப்பான் பூச்சி கட்சி ஜனதா தளம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி மும்பையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முன்னதாக பீகார் மாநிலத்திலும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் சிறப்பு சீர்திருத்தமான எஸ்ஐஆர் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர். தற்போது தேர்தல் ஆணையத்திற்குள்ளேயும் இது புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகள் போராட்டம்
தேர்தல் ஆணையர்களாக உள்ள சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி எஸ்ஐஆர் குளறுபடி குறித்து ஆட்சேபனை தெரிவித்தனர். கடந்த 10 மாதங்களில் 14 முறை எழுத்து பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய வாக்காளர் இணைப்பு, பழைய வாக்காளர்களை நீக்குதல், மேல்முறையீடு, ஷாப்ட்வேர், பார்ம் 6 திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அந்த புகாரை பொருட்படுத்தவில்லை.
இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணைய செயல்பாட்டில் மத்திய பாஜக அரசின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. "இந்திய தேர்தல் முடிவுகள் திருத்தப்பட்டுள்ளது. பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பது எப்படி. மோடியும், அமித்ஷாவும் சதி செய்துள்ளனர். ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். அவரை அரசுத்தரப்பு சாட்சியாக சேர்க்க வேண்டும் "என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மும்பையில் கரப்பான் பூச்சி
இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி நடைபெற்றது. ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் எம்எல் கட்சியினர் ஆகிய 3 பேரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளத.
"ஞானேஷ் குமார் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். அவர் பதவி விலகாவிடின் போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்று கரப்பான் பூச்சி ஜனதாதளம் கட்சி நேற்று முன்தினம் கூறியது. இன்றுடன் அந்த 48 மணி நேரம் முடிந்துவிட்டது. ஞானேஷ்குமார் விலகிவில்லை என்பதால் கரப்பான் பூச்சி ஜனதாதளம் அக்டோபர் 2 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
சூடுபிடிக்கும் விவகாரம்
மும்பையில் போராட்டம் நடைபெறவுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா தளம் நடத்திய போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதனால் வரும் வாரத்தில் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
