"பீம் ஆர்மி டிக்கெட்".. கரப்பான்பூச்சி கட்சி தலைவர் தேர்தலில் போட்டி..பாஜக எம்பி கணிப்பின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்றைய தடியடிக்கு பிறகு இந்த விவகாரம் மிக முக்கியமானதாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே 'பீம் ஆர்மி' சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக பாஜக எம்பி நிசிகாந்த் துபே கூறியுள்ளார். இந்த 'பீம் ஆர்மி' பின்னணி என்ன? அபிஜித் திப்கேவிற்கும், அதற்கும் என்ன தொடர்பு? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் - உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

Abhijeet Dipke

இந்த தடியடியை கண்டித்து இன்று யில் ஏராளமான போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். அதேபோல் போலீசார், அதிரடி படையினரும் காயமடைந்தனர். இந்த தடியடிக்கு பிறகும் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருகிறது.

இந்நிலையில் தான் இந்த போராட்டத்தின் பின்னணியில் அரசியல் செய்யப்படுவதாகவும், கரப்பான்பூச்சி கட்சியின் தலைவர் அபிஜித் திப் விரைவில் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் பாஜக எம்பி நிசிகாந்த் துபே குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக நிசிகாந்த் துபே கூறுகையில், ''
ஒவ்வொரு இயக்கங்களும் அரசியல் தலைவர்களை உருவாக்கி உள்ளது. ஜனதா கட்சியின் போராட்டம் தான் லாலு பிரசாத் யாதவை உருவாக்கியது. அண்ணா ஹசாராவின் போராட்டம் தான் அரவிந்த் கெஜ்ரிவாலை உருவாக்கியது. இதனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவரும் அரசியலில் போட்டியிடலாம்.

நேபாளில் நடந்த ஜென்-ஸி போராட்டத்தை நடத்தியவர்கள் அரசியல் கட்சியில் இணைந்தனர். அதேபோல் அபிஜித் திப்கே அரசியல் கட்சியில் இணைவார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே விரைவில் தேர்தலில் போட்டியிடுவார். பீம் ஆர்மி சார்பில் அவர் களமிறங்குவார் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்'' என்றார்.

இதில் 'பீம் ஆர்மி'யின் முழு பெயர் பீம் ஆர்மி பாரத் எக்தா மிஷன். இந்த அமைப்பு தலித் மக்களின் உரிமைக்காக போராடி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில் இந்த முை்பபை சதீஷ் குமார், விஜய் ரத்தன் சிங் மற்றும் சந்திரசேகர் அசாத் ஆகியோர் தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பு உத்தர பிரதேசத்தில் தலித் மற்றும் முஸ்லிம்களுக்கான மொத்தம் 350க்கும் அதிகமான பள்ளிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தான் அபிஜித் திப்கேவிற்கும், 'பீம் ஆர்மி'க்கும் இடையே என்ன தொடர்பு? என்பது பற்றி பலரும் தேட தொடங்கி உள்ளனர். அதற்கான விடை என்னவென்றால் அபிஜித் திப்கே மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்றாலும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். அம்பேத்கர் சார்ந்த கொள்கைகளை தொடர்ந்து போராட்டங்களில் பேசி வருகிறார். அதுமட்டுமின்றி தற்போது டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு 'பீம் ஆர்மி'அமைப்பினர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். நேற்றைய நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டத்திலும் கூட 'பீம் ஆர்மி' நிறுவனர்களில் ஒருவரான சந்திரசேகர் அசாத் பங்கேற்றார்.

இதனால் தான் பாஜக எம்பி நிசிகாந்த் துபே இந்த கருத்தை முன்வைத்துள்ளார். இருப்பினும் தற்போது வரை அபிஜித் திப்கே தனது அரசியல் பயணம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவருக்கு அரசியலில் ஆர்வம் உள்ளது. இதற்கு முன்பு ஆம்ஆத்மி கட்சியில் சமூக வலைதள பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+