போராட்டத்தை முடக்க முயற்சி? ஆப்ஜித் தீப்கேவை கைது செய்ய அரசு திட்டம்! கரப்பான் பூச்சி ஜனதா பகீர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் 10 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு முன்பாக அபிஜித் தீப்கே உள்பட தங்கள் அமைப்பின் முக்கிய தலைவர்களை கைது செய்ய அரசு திட்டமிட்டு இருப்பதாக சவுரவ் தாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். நாங்கள் கைது செய்யப்பட்டாலும் போராட்டத்தை தொடர வேண்டும் என்றும் எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் போராட்டம் அறிவித்துள்ளது. கடந்த 2 ஆம் தேதி மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Cockroach Janta Party Saurav Das Claims Govt planning to Abhijeet Dipke Before Oct 10

அந்த போராட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 10 ஆம்தேதி பிரமாண்ட போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். நீட் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள், ஞானேஷ்குமாருக்கு எதிராகவும் தீவிர போராட்டத்தை அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் 10 ஆம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தங்கள் கட்சியின் தலைவர்களை கைது செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கரப்பான் பூச்சி கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

நான் உள்பட ஆப்ஜித் தீப்கே, அஸ்தோஸ், ரத்னா ஆகிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களை கைது செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற சர்வாதிகார நடவடிக்கைகள் பலனளிக்கும் என்று அரசு விரும்பினால் அவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம். இளம் தலைமுறை விழித்துக்கொண்டுள்ளது. நமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

நாங்கள் இருக்கிறோமோ இல்லையோ போராட்டம் தொடர வேண்டும். சிறையோ அதை விட மோசமான ஒன்றையோ எதிர்கொள்வதற்கு நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். ஆனால் கைது செய்வது என்பது மிகப்பெரும் தவறாக அமையும். இளைஞர்கள் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். போராட்டம் கண்டிப்பாக தொடர வேண்டும். அக்டோபர் 10 ஆம் தேதி முதல் மிகப்பெரிய எண்ணிக்கையில் திரள்வதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+