"மத்திய அரசை நம்பினோம்! ஆனால்.." மீண்டும் வெடிக்கும் இளைஞர்கள் போராட்டம்? கரப்பான் பூச்சி கட்சி பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் போராட்டம் முடிவுக்கு வந்தபோது மத்திய அரசு போராடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதியளித்திருந்தது. ஆனால், இப்போது மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆர்களை போலீஸ் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதை பயன்படுத்தி போராட்டக்காரர்களை அரசு துன்புறுத்தும் அபாயம் இருப்பதாகவும் கரப்பான் பூச்சி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

நீட் வினாத்தாள் லீக் விவகாரத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தை நடத்தினர். கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த பிறகே இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாமல் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

neet India

உச்ச நீதிமன்றம்

மாணவர் போராட்டங்களின்போது போலீசார் தேவையில்லாமல் அதீத பலத்தை பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் குற்றப் பின்னணி இல்லாத கைதிகளை விடுவிக்கவும் உத்தரவிட்டது. அதே நேரத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆர்களின் விசாரணையை அரசுகள் தொடரலாம் என்றும் கூறியது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் மீது தேவை என்றால் நடவடிக்கை எடுக்கலாம் என்பது போல கூறப்பட்டது.

கரப்பான பூச்சி கட்சி

இருப்பினும், இதற்கு கரப்பான பூச்சி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், "அமைதியான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்ஐஆர்களும் திரும்பப் பெறப்படும் என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ நடவடிக்கை இருக்காது என்றும் மத்திய அரசு உறுதியளித்தது. அந்த வாக்குறுதியை நம்பியே நாங்கள் போராட்டத்தை கைவிட்டோம். ஆனால், இந்த உத்தரவு அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

இப்போது இந்த உத்தரவை மத்திய அரசும், பாஜக ஆளும் மாநிலங்களும் ஆயுதமாக பயன்படுத்தி, போராட்டக்காரர்கள் மீது தொடர்ந்து வழக்குகளை நடத்தி அவர்களை துன்புறுத்த முயலலாம் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராடியவர்களை இந்த நீதிமன்ற தீர்ப்பை காட்டி ஒடுக்குவார்களோ என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது

ஏற்க முடியாது

போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று அரசு அளித்த உறுதிமொழி குறித்து தெரிந்திருந்தும், நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அதை நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. இந்த உத்தரவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட உறுதியை நீர்த்து போக செய்ய முடியாது. அமைதியான போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களை மத்திய அரசும், பிற மாநிலங்களும் திரும்ப பெற வேண்டும்.

மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு சீக்கிரமே முடிவடைகிறது.. அனைத்து எஃப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும்.. போராட்டக்காரர்கள் மீது எதிர்காலத்திலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால், நாடு தழுவிய போராட்டத்தை மீண்டும் தொடங்குவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. வாக்குறுதியை மீறும் அரசிடம் இளைஞர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். வாக்குறுதி மீறப்பட்டால், இந்தியாவின் தெருக்கள் மீண்டும் இளைஞர்களின் குரலாக மாறும்" என்றார்.

பின்னணி

கடந்த ஜூன் 20ஆம் தேதி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நீட் வினாத்தாள் லீக் விவகாரத்திற்கு எதிராக தொடங்கிய போராட்டம் 36 நாட்கள் நீடித்தது. அப்போது ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகை பேரணியின் போது போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு மற்றும் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து மத்திய அரசுடன் நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். மேலும், அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது, நீட் விவகாரத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்ற உறுதியை மத்திய அரசு அளித்ததைத் தொடர்ந்து கரப்பான் பூச்சி கட்சி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றது.

முன்னதாக நேற்றைய தினம் தான் வழக்கை வாபஸ் செய்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் மீண்டும் போராட்டம் தொடங்குவோம் என்றும் கரப்பான் பூச்சி கட்சி எச்சரித்திருந்தது. இன்று மீண்டும் இப்போது அதேபோன்ற ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+