தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு.. கோவையில் ஆர்ப்பாட்டம்.. மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரண்டு நாட்களுக்கு முன்பு தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மருத்துவ மாணவர்கள் போராடி வருகிறார்கள்.

கடந்த வாரம் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்திய மருத்துவ கவுன்சில்தான் தற்போது மருத்துவத்துறையை இந்தியாவில் கவனித்து வருகிறது. இதற்கு மாற்றாக தற்போது தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட உள்ளது.

Coimbatore Medical College Students form a human-chain protest against National Medical Commission bill

மருத்துவ கல்லூரி தொடங்கி மருத்துவமனைகள் வரை அனைத்திற்கும் இந்திய மருத்துவ கவுன்சில்தான்அனுமதி வழங்கி வந்தது. ஆனால் இனி இந்த கவுன்சில் கலைக்கப்படும், மொத்தமாக இதில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படும்.

இதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்த இந்த மசோதா இன்று வெற்றிகரமாக நிறைவேறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

Coimbatore Medical College Students form a human-chain protest against National Medical Commission bill

இந்த நிலையில் தற்போது இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மாணவர்கள் போராடி வருகிறார்கள். கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம் உட்பட அமைதியான முறையில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

Coimbatore Medical College Students form a human-chain protest against National Medical Commission bill

ஏற்கனவே அவையில் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+