தீவிரவாத முகாம்கள் எப்படி அழிக்கப்பட்டன..? வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட ராணுவம்! இதை பாருங்க!
டெல்லி: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் எப்படி அழிக்கப்பட்டது என்பதற்கான வீடியோ ஆதாரத்தை இன்று செய்தியாளர் சந்திப்பின்போது இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
கர்னல் சோபியா குரேஷி, இன்று செய்தியாளர் சந்திப்பின் போது, நள்ளிரவில் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களைக் காட்டும் வீடியோக்களை காட்டினார். இதில் 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி பயிற்சி பெற்ற முரிட்கே பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்ட வீடியோ காட்சியும் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 தீவிரவாத முகாம்கள் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் தகர்க்கப்பட்டு உள்ளன. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் இடம், ஆள் சேர்ப்பு, தங்கும் இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவாதிகளின் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. தீவிரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 வரை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் இந்த பதிலடி பயங்கரவாத குழுக்களை நிலைகுலையச் செய்துள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து தீவிரவாதிகளுக்கு எதிரான பதிலடி குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
#WATCH | Delhi | #OperationSindoor| Col. Sofiya Qureshi, while addressing the media, presents videos showing destroyed terror camps, including from the Muridke where those involved in the 2008 Mumbai Terror attacks - Ajmal Kasab and David Headley received their training..." pic.twitter.com/tNpsDf92Wu
— ANI (@ANI) May 7, 2025
பயங்கரவாத முகாம்கள் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் எப்படி அழிக்கப்பட்டது என்பதற்கான வீடியோ ஆதாரத்தை இன்று செய்தியாளர் சந்திப்பின்போது காட்டினார் கர்னல் சோபியா குரேஷி. அதில் 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி பயிற்சி பெற்ற முரிட்கே பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்ட வீடியோ காட்சியும் இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications