ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு.. மத்திய அரசு
டெல்லி: நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலையடுத்து நாடு முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக இவை மூடப்பட்டுள்ளது. கல்லூரிகளை பொருத்தவரை ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

அது போல் 2020-2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, கல்லூரிகள் திறப்பு ஒத்தி போகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் தற்போது 3-ஆவது முறையாக லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது.
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அது போல் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.
கடந்த மாத இறுதியில் கல்லூரிகள் திறப்பு மற்றும் ஒத்தி வைக்கப்பட்ட பருவத் தேர்வுகளை நடத்துவது குறித்து யூஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) இரு குழுக்களை அமைத்தது. அந்த குழுக்களின் பரிந்துரையின்படி இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications