முனாவர் பரூக்கி.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது இந்துத்துவாவினருக்கு வந்த கோபம்.. ஆரம்பிச்சிட்டாங்கல்ல
டெல்லி: மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜியண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான முனவர் பரூக்கி கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் முனவர் ஃபரூக்கி. பிரபல ஸ்டான்ட் அப் காமெடியனாக இருந்து வரும் இவர் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பல்வேறு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி பிரபலமானார். இவர் செய்யும் நிகழ்ச்சிகளில் நகைச்சுவை மட்டுமின்றி அதில் நடப்பு அரசியல், நையாண்டி, சமூக அவலம் குறித்து அதிக கருத்துக்கள் இடம்பெற்று இருக்கும்.

முனவர் ஃபரூக்கி மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள், திட்டங்கள், புதிய சட்ட மசோதாக்கள் பற்றியும் நகைச்சுவை கலந்து விமர்சித்து இருக்கிறார். இதனால் கொதிப்படைந்த பாஜக ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்துவா அமைப்பினர் முனவர் ஃபரூக்கியை கைது செய்ய வலியுறுத்தினர். எந்த நகரங்களில் எல்லாம் முனவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சிகள் நடக்கிறதோ எங்கெல்லாம் இந்துத்துவாவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முனவர் பரூக்கியின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் இந்துத்துவ அமைப்புகள் குரல் எழுப்பி வந்தன. கடந்த 2021 ஆம் ஆண்டு முனவர் ஃபரூக்கி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற இருந்த முனவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சிகள் விளம்பரம் செய்யப்பட்டு, டிக்கெட்டுகள் விற்கப்பட்ட பிறகும் ரத்து செய்யப்பட்டன.

பல மாநிலங்களில் முனவர் ஃபரூக்கி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக அவரது சொந்த மாநிலமான குஜராத்தின் சூரத் மற்றும் வதோதராவில் அவரது நிகழ்ச்சியில் ரத்தாகின. அதேபோல் மும்பை, ராய்பூர், கோவா உள்ளிட்ட பல பகுதிகளில் அடுத்தடுத்து முனவர் பரூக்கி நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து ரத்தாகின.
பெங்களூரிலும் இதேபோல் அவரது நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டு பின்னர் போலீசார் அனுமதி மறுத்ததன் காரணமாக ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஐதராபாத்தில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினரின் பலத்து எதிர்ப்புகளுக்கு மத்தியில் முனவர் பரூக்கி நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து டெல்லியில் இவரது நிகழ்ச்சி ரத்தானது.

அதிகார மட்டத்தில் இருந்து தனக்கு நிறைய அச்சுறுத்தல்கள் வருவதாகவும், நிகழ்ச்சிகள் ரத்தானதால் வருவாய் இன்றி சிரமப்பட்டதாகவும், தற்கொலை எண்ணங்கள் வரை தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் பேசி இருந்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குஜராத் - மும்பை இடையிலான போட்டியின்போது இந்தி ஸ்டார் ஸ்போர்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனவர் பரூக்கியும் கலந்துகொண்டார்.
இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து பாஜக ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்துவா அமைப்பினர் கடும் கண்டங்களை பதிவு செய்து வருகிறார்கள். அத்துடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி #BoycottStarSports என்ற ஹேஷ்டேக்கையும் அவர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications