7-வது மாதம்! வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு.. தற்போதைய விலை நிலவரம் என்ன?
டெல்லி: வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை 116 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்றும் வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு மாற்றியமைத்து வருகிறது.
இதில் சமையலுக்கான கேஸ் சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை அறிவிக்கப்படும். ஒரு சில நேரங்களில் மாதம் இருமுறை அறிவிக்கப்படும்.

வணிகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை
இதேபோல தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையும் தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நவம்பர் மாதத்துக்கான எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதில், வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் விலையில் மாற்றமில்லை.

7-வது முறையாக குறைவு
வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை 115.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிகத்திற்கான கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை கடந்த மாதம் ரூ.2009.50 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 115.50 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.1893 க்குவிற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மாதத்துக்கு பிறகு தொடர்ந்து 7-வது முறையாக தற்போது வணிகத்திற்கான கேஸ் சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4 வது மாதமாக மாற்றமின்றி
இதேபோல் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையானது தொடர்ந்து 4 மாதமாக எந்த விதமாற்றமும் செய்யப்படாமல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.1,068.5-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை
ரஷியா-உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் தற்போது இந்த கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியிருக்கிறது. இதனாலேயே தற்போது பெட்ரோல் மற்றும் டீசலில் விலையில் பெரிய மாற்றமின்றி தொடருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications