காங்கிரசையடுத்து இந்திய கம்யூனிஸ்ட்.. 11 கோடியை உடனே செலுத்துங்க.. வருமான வரித்துறை நோட்டீஸ்
டெல்லி: காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தீவிரமாக தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வரி பாக்கி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை, ரூ. 11 கோடி பாக்கியை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பழைய PAN கார்டு எண்ணை பயன்படுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரி தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள வருமான வரித்துறை, வரி பாக்கி மற்றும் வரி கணக்கு தாக்கல் முரண்பாடுகளுக்காக ரூ. 11 கோடியை செலுத்த வேண்டும் என சிபிஐ கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக, முந்தைய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வரிக் கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்காக, 1,823 கோடி ரூபாய் பாக்கி தொகையை செலுத்துமாறு, வருமான வரித்துறை, காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏற்கெனவே, வருமான வரித் துறையால் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டதுடன், ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் ஏற்கனவே நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி கட்சிகள் நிதி ரீதியாக சிக்கலை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகளை முடக்கும் வகையில், பாஜக வருமான வரித்துறையை பயன்படுத்தி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications