சாக்லேட்,ரோஜா பழசு! காதலர் தினத்தன்று ஆணுறை வாங்கி குவிப்பு! "அந்த" பொருளும் இருக்காம்
டெல்லி: காதலர் தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ஆணுறைகள் விற்பனை நேற்று புது உச்சத்தை எட்டி உள்ளதாகப் பிரபல ஆன்லைன் டெலிவரி தளம் அறிவித்துள்ளது.
உலகெங்கும் காதலர் தினம் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலர் தின கொண்டாட்டங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இந்த காதலர் தினம் அன்பைப் பரிமாறும் அற்புதமான நாள் என்பதில் சந்தேகமே இல்லை. அதேபோல காதலர் தினத்தைச் சுற்றிலும் மிகப் பெரிய பிஸ்னஸும் இருக்கிறது.

காதலர் தின விற்பனை: ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று ரோஜாக்கள், கேக்குகள், டெட்டி பியர் விற்பனை பல மடங்கு எகிறும்.. இந்தாண்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. அத்துடன் சேர்ந்த மற்றொன்று பொருளின் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாம். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இது தொடர்பான விவாதங்களை இன்ஸ்டன்ட் டெலிவரி தளமான பிளிங்கிட் வெளியிட்டுள்ளது. அதன்படி காதலர் தினத்தன்று எந்தெந்த பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்பதை வைத்தே இந்தக் காலத்தில் இளைஞர்களின் டிரெண்ட் என்னவாக இருக்கிறது என்பதை நம்மால் கண்டறிய முடிகிறது. டெட்டி பியர்ஸ், சாக்லேட் மற்றும் ரோஜாக்களின் விற்பனை அனைத்து ஆண்டுகளையும் போலவே இந்தாண்டும் அதிகமாக இருந்துள்ளது.
டெடி பியர்: டெடி டே பிப். 10ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அதைக் காட்டிலும் காதலர் தினத்தன்று டெடி பியர்கள் விற்பனை அதிகரித்துள்ளது. டெடி பியர்கள் மட்டுமின்றி அனைத்து வகையான சாப்ட் டாய்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக பிளிங்கிட் நிறுவனர் அல்பிந்தர் திந்த்சா தெரிவித்துள்ளார். அதேபோல காதலர் தினத்தன்று அழகுசாதன பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாம்.
காதலர் தினத்தன்று மற்ற நாட்களுடன் ஒப்பிடும் போது லிப்ஸ்டிக்குகள் விற்பனை 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. காதலர் தினத்தன்று பலரும் டேட்டிங் செல்ல வெளியே சென்று இருக்கலாம் என்றும் இதன் காரணமாகவே விற்பனை அதிகரித்துள்ளதாக அல்பிந்தர் திந்த்சா கூறியிருக்கிறார். காதலர் தினத்தன்று சாக்லேட்கள், ரோஜா பூக்கள், பூங்கொத்துகள் ஆகியவை பிளிங்கிட் தளத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களாக இருக்கிறது.
லிஸ்டில் உள்ள அந்த பொருள்: காதலர் தினத்தன்று இளசுகள் எதையெல்லாம் ஆர்டர் செய்தார்கள் என்பது குறித்து வேறு சில தகவல்களையும் அல்பிந்தர் திந்த்சா பகிர்ந்துள்ளார். இளசுகள் handcuffs எனப்படும் கைவிலங்கு போல இருக்கும் பொருட்களைப் பல மடங்கு ஆர்டர் செய்துள்ளனர். அதேபோல பர்சனல் மசாஜர்கள் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.. அனைத்தையும் விடக் காண்டம் விற்பனை தான் பிளிங்கிட் தளத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆணுறை விற்பனை: வழக்கமான நாட்களுடன் ஒப்பிடும் போது ஆணுறைகள் விற்பனை நேற்று மட்டும் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இது நேற்று மாலை 7 மணி வரை இருந்த டேட்டா தான். அதன் பிறகு ஆணுறைகள் விற்பனை மேலும் அதிகரித்து இருக்கலாம் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர். நெட்டிசன்கள் இது தொடர்பாக பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர்,
என்ன நடந்தாலும் பாதுகாப்பிற்காக ஆணுறைகளை வாங்கும் இளைஞர்களைப் பாராட்டலாம் என்று ஒரு தரப்பினர் நக்கலடித்து வருகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் காதலர் தினம் நமது கலாச்சாரத்தை எந்தளவுக்குச் சீரழிக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் என்று சாடி வருகின்றனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications