பிரசாந்த் கிஷோர் 'கேம்'- எதிர்க்கட்சிகள் அணியில் காங். இடம்பெறும்- பாஜகவுக்கு ஷாக் கொடுத்த சரத்பவார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய அளவில் உருவாக்கப்படும் எதிர்க்கட்சிகள் அணியில் காங்கிரஸ் கட்சியும் இடம் பெறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் பாஜக ஏமாற்றம் அடைந்துள்ளது.

2024 லோக்சபா தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் மெல்ல மெல்ல தொடங்கிவிட்டன. அண்மையில் சரத்பவாரை தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் 2 முறை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சரத்பவார் திடீர் ஆலோசனை

சரத்பவார் திடீர் ஆலோசனை

இந்த ஆலோசனைக்குப் பின்னர் டெல்லியில் திடீரென சரத்பவார் இல்லத்தில் 8 எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்காத போதும் சரத்பவாரின் இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

3-வது அணியா என சந்தேகம்

3-வது அணியா என சந்தேகம்

2024 லோக்சபா தேர்தலுக்கான 3-வது அணியை அமைக்க சரத்பவார் முயற்சிக்கிறாரா? இது பாஜகவுக்குதானே சாதகமாக இருக்கும்? என்கிற கேள்வியும் எழுந்தது. காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்காமல் இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை சரத்ப்வார் கூட்டியது ஏன் என்கிற ச்ந்தேகமும் எழுந்தது. இத்தனைக்கும் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ்- சிவசேனா கூட்டணி அரசு நடைபெற்று வரும் நிலையில் சரத்ப்வார் சிவசேனாவையும் அழைக்கவில்லை; காங்கிரஸையும் அழைக்கவில்லையே ஏன்? என்பதும் ஒரு கேள்வியானது.

சிவசேனா கருத்து

சிவசேனா கருத்து

இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், பாஜகவுக்கு எதிரான வலிமையான அணியை உருவாக்க சரத்பவார் நினைத்தால் காங்கிரஸையும் இணைத்து கொள்ள வேண்டும்; பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்காத நிலையில் சரத்பவார் புதிய கூட்டணிக்கான ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருக்கமாட்டார்; நாட்டு நிலவரம் குறித்து ஆலோசித்திருப்பார் என்றார்.

பாஜகவுக்கு ஷாக்

பாஜகவுக்கு ஷாக்

இதனிடையே புதிய திருப்பமாக, எதிர்க்கட்சிகள் கூட்டணி ஒன்று உருவானால் அதில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெறும். காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகள் அணியை உருவாக்க நாங்கள் நினைக்கவில்லை என சரத்பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் 3-வது அணி அமைந்தால் லாபம்தானே என கணக்குப் போட்டு காத்திருந்த பாஜகவுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+