“அப்போவே புகார் சொன்னோம்.. ஹரியானாவில் தோல்விக்கு காரணம் தேர்தல் ஆணையம்தான்!” - ராகுல் காந்தி
டெல்லி: ஹரியானா சட்டமன்ற தேர்தல் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கைக்கு அடுத்த நாள் காங்கிரஸ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பதாக புகார் அளித்திருந்தது. குறிப்பட்ட 7 தொகுதிகளில் இந்த பிரச்சனை இருப்பதாகவும் கூறியிருந்தது. தற்போது இந்த தொகுதிகளில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களை சமர்பித்திருக்கிறார்.

- ராய் - பா.ஜ.க - கிருஷ்ணா கலாவத்
- நார்நவுல் - பா.ஜ.க - ஓம் பிரகாஷ் யாதவ்
- கர்னால் - பா.ஜ.க - ஜக்மோகன் ஆனந்த்
- தப்வாலி - ஐ.என்.எல்.டி - ஆதித்யா தேவிலால்
- ஹோடால் - பா.ஜ.க - ஹரிந்தர் சிங்
- கால்கா - பா.ஜ.க - சக்தி ராணி சர்மா
- பானிபட் சிட்டி - பா.ஜ.க - பிரமோத் குமார் விஜ்
- ரேவாரி - பா.ஜ.க - லக்ஷ்மன் சிங் யாதவ்
இந்த 7 தொகுதிகள் குறித்துதான் காங்கிரஸ், தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தது. இதில் 6ல் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதிகளில் முறைக்கேடுகள் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தொகுதியில் கடந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் பாஜக வென்றிருக்கிறது. ஆனால், இந்த தொகுதியில் ஒரே பெண் சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, ரஷ்மி, வில்மா போன்ற பெயர்களில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருக்கிறார். விசாரித்ததில் இவர் பிரேசிலை சேர்ந்த மாடல் என்பது தெரிய வந்தது என்றும், இப்படி ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு திருட்டு நடந்திருப்பதாகவும், மாநில அளவில் மொத்தம் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "ஹரியானா வாக்காளர்களில் எட்டில் ஒருவர் போலியா. ஹரியானாவின் தேர்தல் தரவுகளை ஆய்வு செய்ததில், 25 லட்சம் போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இது மொத்த வாக்காளர்களில் சுமார் 12.5%. தபால் வாக்குகள் மற்றும் வாக்குச்சாவடி நிலைத் தரவுகள் மாநிலத்தின் வரலாற்றில் முதல் முறையாக கடுமையான முரண்பாடுகளை காட்டுகின்றன. காங்கிரஸ் வெற்றிபெறும் என்று கணித்த கருத்துக்கணிப்புகளுக்கு இது முரணாக இருந்தது.
போலி வாக்காளர்கள் பலமுறை வாக்களித்தனர். வாக்குப்பதிவு பட்டியல்களில் இருந்து ஒரு பெண், இரண்டு வாக்குச்சாவடிகளில் 223 முறை தோன்றியுள்ளார். அவர் விரும்பிய பலமுறை வாக்களிக்கலாம். மற்றொரு பெண் அவர் விரும்பிய பலமுறை வாக்களித்துள்ளார். இந்த விவகாரங்களில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில், உத்தரப் பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் பாஜக ஆதரவாளர்கள் ஹரியானா தேர்தல்களில் வாக்களித்துள்ளனர் என்பதுதான்.
தலைமை தேர்தல் ஆணையர் பகிரங்கமாக மக்களுக்கு பொய் சொல்கிறார். ஹரியானா அரசாங்கத்தைத் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. ஹரியானா அரசாங்கம் திருடப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஹரியானா தேர்தலில் வெறும் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தேர்தலுக்கு முன்னதாக ஹரியானாவில் 3.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் வாக்காளர்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications