கார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால்.. நான் இதை செய்வேன்.. சோனியாவையே மிரட்டி சாதித்த ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகனுக்கு சீட் கேட்டு அடம்பிடித்த ப.சிதம்பரம்...பயந்து போன சோனியா காந்தி

    டெல்லி: கார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால் நான் மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் என ப.சிதம்பரம் மிரட்டியதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் கட்சி தொண்டர்கள் மன வருந்தினர். பின்னர் தோல்விக்கு பொறுப்பேற்று தான் பதவி விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் காரிய கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி மிகவும் ஆவேசமாக பேசினார். ராகுல் பேசிய போது ப.சிதம்பரம், கமல்நாத், அசோக் கெலாட் ஆகியோர் தன் மகன்களுக்கு சீட் வழங்குமாறு என்னிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    கார்த்தி சிதம்பரம்

    கார்த்தி சிதம்பரம்

    நான் வேண்டாம் என சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இறுதியாக அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார். இந்த பேச்சின் மூலம் சிவகங்கை வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் களமிறக்கப்பட்டது எப்படி என்பது தெரியவந்துள்ளது.

    தற்கொலை

    தற்கொலை

    ராகுல் பேச்சை முடித்த பிறகு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பேசிய போது நீங்கள் ராஜினாமா செய்தால் தென் மாநில தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வர் என மிரட்டினார். இதையேற்று ராகுல் தனது முடிவை மாற்றி கொண்டதாக தெரிகிறது.

    பரபரப்பு

    பரபரப்பு

    இதையடுத்து மீண்டும் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக ராகுல் கூறியுள்ளார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பிரியங்கா காந்தி , அகமது படேல் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.

    மிரட்டல்

    மிரட்டல்

    அவர் கூறுகையில் ப.சிதம்பரம் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார். அப்போது தனது மகனுக்கு மக்களவை எம்பிக்கான சீட் கொடுக்காவிட்டால் தான் மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இப்படி மிரட்டியே இவர் தனது மகனுக்கு சீட் பெற்றுள்ளார் என அந்த நிர்வாகி தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+