டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'இது சர்தார் படேலுக்கு நேர்ந்த அவமானம்' - நரேந்திர மோடி ஸ்டேடியத்தை பிரித்து மேயும் காங்கிரஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: மொடேரா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது சர்தார் படேலுக்கு நேர்ந்த அவமானம் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டமைக்கப்பட்டுள்ள மோட்டேரா ஸ்டேடியத்தில் நேற்று (பிப்.24) தொடங்கியது.

800 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டியெழுப்பப்பட்ட இந்த ஸ்டேடியம் அகமதாபாத்தில் உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த ஸ்டேடியத்தை திறந்து வைத்தார்.

அடேங்கப்பா.. 'அதானி end.. ரிலையன்ஸ் end..' நம்பர்.1 ஸ்டேடியம் குறித்து ராகுல் காந்தி 'சுளீர்' ட்வீட்அடேங்கப்பா.. 'அதானி end.. ரிலையன்ஸ் end..' நம்பர்.1 ஸ்டேடியம் குறித்து ராகுல் காந்தி 'சுளீர்' ட்வீட்

 ரிலையன்ஸ், அதானி முனை

ரிலையன்ஸ், அதானி முனை


63 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் ஒரே நேரத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். எனினும், சர்தார் படேல் என்றிருந்த இந்த ஸ்டேடியத்தின் பெயர், நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, பிட்சின் இரு முனைக்கும் ரிலையன்ஸ் என்ட் (Reliance End) மற்றும் அதானி என்ட் (Adhani End) என பெயர் மாற்றப்பட்டது.

அவமதிப்பு

அவமதிப்பு

பிரதமர் மோடியின் பெயர் இந்த ஸ்டேடியத்துக்கு வைக்கப்பட்டது கடைசி நிமிடத்தில் தான் பலருக்கும் தெரிய வந்தது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பெயர் வைக்கப்பட்டதன் மூலம், பாஜக சர்தார் வல்லபாய் படேலின் பெருமையை அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் பிரதமர் மோடி

இதுகுறித்து ட்வீட் செய்த காங்கிரஸின் ராகுல் காந்தி, " உண்மை தன்னைத் தானே எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை பார்க்க அழகாக உள்ளது" என்று நாசூக்காக விமர்சித்திருந்தார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது பாஜகவின் பாரம்பரியம். லக்னோவின் பாரம்பரிய Hazratganj Chauraha-விற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் வைக்கப்பட்டது. அவர் இப்போது பிரதமராக இல்லை. அதுபோல், இந்த ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடி பெயர் வைக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், இது மோடி ஜி முன்னாள் பிரதமர் ஆகப் போகிறார் என்பதற்கான அறிகுறியாகும்" என்று கூறியுள்ளார்.

 இப்போ படேல் ஜி

இப்போ படேல் ஜி

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, "முதலில் காதி காலண்டரில் இருந்து காந்தி ஜி படத்தை அகற்ற மோடி ஜி வந்தார். இப்போது ஸ்டேடியத்திற்கு அவரது பெயரை வைத்தது மூலம், சர்தார் படேலின் பெயரை அகற்றியுள்ளார்" என்று விமர்சித்திருக்கிறார்.

 முதல் உள்துறை அமைச்சர்

முதல் உள்துறை அமைச்சர்

குஜராத் காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல், "இந்த ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது சர்தார் படேலுக்கு நேர்ந்த அவமானமல்லவா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். சர்தார் படேல் பெயர் சொல்லி வாக்கு கேட்கும் பாஜக, இப்போது இந்தியாவின் முதல் மத்திய உள்துறை அமைச்சரை அவமதிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

 நமக்கு நாமே

நமக்கு நாமே

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், "ஏதாவது சாதித்தவர்களின் பெயர்களை, பாரம்பரிய தளங்களுக்கு சூட்டி உலகம் அவர்களை நினைவில் வைத்திருக்கும். ஒன்றும் செய்யாதவர்கள் தான், உயிரோடு இருக்கும் போதே இப்படி தங்கள் பெயர்களை வைத்துக் கொள்வார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்..

English summary
congress criticized bjp for named narendra modi stadium in Ahmedabad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X