இப்படியுமா? அதிகார வரம்பு தெரியாதா? தமிழ்நாடு ஆளுநர் ரவியை டிஸ்மிஸ் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்!
டெல்லி: தமக்கான அதிகார வரம்பு தெரியாமல் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென நேற்று இரவு அறிக்கை மூலம் அறிவித்தார். செந்தில் பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன; அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்; இதனால் ஏற்கனவே இலாகா இல்லாத அமைச்சராகத்தான் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். ஆனால் எந்த ஒரு ஆலோசனையும் இல்லாமல் திடீரென செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ரவி அறிவித்தது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே தமது டிஸ்மிஸ் அறிக்கையை நிறுத்தி வைப்பதாகவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர் ரவியின் இந்த குழப்பமான நடவடிக்கை நாடு தழுவிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாநிலத்தில் ஆளுநருக்கான அதிகாரம் எது என்பதை உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தெள்ள தெளிவாக கூறிய பின்னரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயல்பாடு கடுமையான கண்டனத்தை எதிர்கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி எம்.பி. கூறுகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உடனடியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமக்கான அதிகார வரம்பு எது என்பது தெரியவில்லை. ஒரு ஆளுநர் என்பவர் இத்தகைய அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளவே கூடாது. இப்படியான நடவடிக்கைகள் மூலம் அரசியல் சாசனம் தமக்கு என்ன அதிகாரம் கொடுத்துள்ளது என்பதை அறியாமல்தான் ஆளுநராக இருக்கிறார் ரவி என்பது தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.
திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ஆளுநருக்கு அமைச்சரை நீக்குகிற அதிகாரம் எதுவும் இல்லை. மாநில முதல்வரின் அறிவுறுத்தல் இல்லாமல் அமைச்சரவையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஆளுநரால் செய்ய முடியாது. அரசியல் சாசனத்தை மீறி ஆளுநர் செயல்படுகிறார். ஒருவர் மீது வழக்குகள் இருப்பதாலேயே அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்துவிடவும் முடியாது என கூறியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (29.6.2023) ஓர் அரசமைப்புச் சட்ட விரோத ஆணையை சிறிதும் முன்யோசனையின்றி, 'ஆத்திரக்காரருக்கு அறிவு மட்டு' என்ற பழமொழிக்கொப்ப, அமைச்சர் செந்தில்பாலாஜியை ''டிஸ்மிஸ்'' செய்வதாக வெளியிட்டார். அதே ஆணையை 5 மணிநேரத்தில் திரும்பப் பெற்றார். இது அவர் எப்படி தனது பதவி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவண சாட்சியம் ஆகும். இப்படி அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, தி.மு.க. ஆட்சியின்மீது வன்மத்துடன் நடந்துகொண்டு வரும் இந்த ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்து வெளியேறவேண்டும். ஜனநாயகத் தத்துவப்படி இந்த ஆளுநரை 'டிஸ்மிஸ்' செய்ய முன்வரவேண்டும் குடியரசுத் தலைவர். அவரை ஆளுநராக அனுப்பியவர்களும், இதற்கான தார்மீகப் பொறுப்பேற்க முன்வரவேண்டும்! 13 மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நாளும் ஆளும் கட்சியின் கொள்கைகளை எதிர்த்தும் ஒரு போட்டி அரசு நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளும், மக்களும் திரண்டு, ''ஆளுநரை டிஸ்மிஸ் செய்'' என்ற ஒற்றைக் கோரிக்கையை - பிரச்சாரத்தை எங்கெங்கும் அடைமழையாகப் பொழிய வைக்கவேண்டியது, ஜனநாயகக் காப்புக் கடமையாகும் என கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications