மோடி அரசின் 100 நாள் ஆட்சி.. மூன்று வார்த்தைகளுடன்.. வீடியோ வெளியிட்டு கலாய்க்கும் காங்கிரஸ்
Recommended Video
டெல்லி: பாஜக அரசு மீண்டும் பதவியேற்று 100 நாள் ஆகியுள்ள நிலையில் இந்த 100 நாள் ஆட்சியில் கொடுங்கோன்மை, குழப்பம் மற்றும் அராஜகம் ஆகியவையே இருந்ததாக கூறி காங்கிரஸ் வீடியோ வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பதவியேற்று 100 நாள் ஆகியுள்ளதை பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி மோடி அரசின் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்த 100 நாள் ஆட்சியில் கொடுங்கோன்மை, குழப்பம் மற்றும் அராஜகம் ஆகியவையே நிகழ்ந்திருப்பதாக விமர்சித்துள்ளது.
Three words that describe the first 100 days of BJP 2.0 - tyranny, chaos and anarchy. #100DaysNoVikas pic.twitter.com/cREgRkrhcL
— Congress (@INCIndia) September 8, 2019
இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் வீடியோ பதிவில், இந்த 100 நாளில் இந்த நாடு பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவையும், கும்பல் தாக்குதல் அதிகரிப்பையும் , அரசியல் பேரங்களையும், நாடாளுமன்றத்தில் மசோதக்கள் நிறைவேற்றப்பட்டது ஆகியவற்றை கண்டது.
நாட்டின் 8 முக்கிய துறைகளிள் வளர்ச்சி விகிதம் 2 சதவீதமாக சரிந்துள்ளது. ஆனால் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியில் உள்ளதை நிதியமைச்சர் ஏற்க மறுக்கிறார். பாஜக அரசு அலட்சியமான மற்றும் வஞ்சமான பாதையை தொடர்வதால் நாம் மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications