நாங்கள் ராணுவ டீலிங்கை வைத்து ''டீலிங்'' முடிக்கவில்லை.. காங்கிரஸை கிண்டல் செய்த நிர்மலா சீதாராமன்!
காங்கிரஸ் கட்சியை போல நாங்கள் ராணுவ டீலிங்கை வைத்து ''டீலிங்'' முடிக்கவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸை கிண்டல் செய்தார்.
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் கட்சியை போல நாங்கள் ராணுவ டீலிங்கை வைத்து ''டீலிங்'' முடிக்கவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸை கிண்டல் செய்தார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக் சபாவில் ரபேல் ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். ரபேல் ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது, எப்படி செய்யப்பட்டது என்று விளக்கி கூறினார்.
இதில் காங்கிரஸ் மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். ரபேல் பற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகார்களுக்கு அவர் பதில் அளித்தார்.

பக்கத்து நாடு
அவர் தனது பேச்சில், பக்கத்து நாடுகள் எல்லாம் ராணுவ பாதுகாப்பில் வேகமாக வளர்கிறார்கள். அவர்கள் இந்தியா வளர வேண்டும் என்று காத்திருக்கவில்லை. சீனாவும், பாகிஸ்தானும் மிகவும் வேகமாக வளர்ந்துவிட்டது. அவர்கள் தங்கள் ராணுவத்திற்கு புதிய உபகரணங்களை வாங்கி குவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா பலம்
ஆனால் இந்தியா கடந்த 10 வருடமாக பெரிதாக எந்த ராணுவ விமானங்களையும் வாங்கவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ராணுவ பாதுகாப்பிற்காக நிறைய ஒப்பந்தங்கள் போடப்பட்டது. ஆனால் அதன்பின் காங்கிரஸ் ஆட்சியில் அப்படி எந்த விதமான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.

காங்கிரஸ் எப்படி
காங்கிரஸ் இத்தனை வருடமாக ராணுவ டீலிங்கை வைத்து பல டீலிங்கை முடித்து வந்தது. அதனால்தான் 10 வருடங்களில் அவர்களால் ரபேல் ஒப்பந்தத்தை முடிக்க முடியவில்லை. இந்திய பாதுகாப்பு மீது ராகுல் காந்திக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பது இப்போதே தெரிகிறது.

ராணுவ டீலிங்
நாங்கள் ராணுவ டீலிங் செய்து இருக்கிறோம். காங்கிரஸ் போல ராணுவ டீலிங் வைத்து டீலிங் செய்தவர்கள் கிடையாது. இல்லாத சிஏஜி அறிக்கையை வைத்து காங்கிரஸ் எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கிறது. இந்தியா பாதுகாப்பில் விரைவில் தன்னிறைவு அடையும்.












Click it and Unblock the Notifications