டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சோனியாவை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. பேசியது என்ன??

திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

எப்போதுமே உட்கட்சி பூசலில் சிக்கி தவிக்கும் தமிழக காங்கிரஸ் கடந்த சில மாதங்களாகவே அதிகமாக தவித்து வருகிறது.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு பக்கமும், தற்போதைய காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஒருபக்கமும் மாறி மாறி புகார் சொல்லி வருகிறார்கள்.

அழைப்பு

அழைப்பு

இதனால் மாநில காங்கிரஸ் தலைமை மாறும் என எதிர்பார்க்கப்பட்டே வந்தது. 5 மாநில தேர்தல் முடிந்து டெல்லி திரும்பிய ராகுல் மாநில விவகாரங்கள் குறித்து தலைவர்களிடம் விவாதிக்க எண்ணினார். அதன்படி ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

சலசலப்பு

சலசலப்பு

இந்த அழைப்பை ஏற்று இளங்கோவனும் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். எதற்காக இந்த அழைப்பு என தெரியாமல் தமிழக காங்கிரசில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் நிலவி வருகிறது.

சோனியாவுடன் சந்திப்பு

சோனியாவுடன் சந்திப்பு

இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லியில் சோனியாக காந்தியையும் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வீழ்த்தும் என்றார்.

பலமான கூட்டணி

பலமான கூட்டணி

திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாக நம்பிக்கை தெரிவித்த இளங்கோவன், தற்போது சோனியாவை சந்தித்துள்ளதாகவும், தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் மனநிலையை அவரிடத்தில் கூறியுள்ளதாகவும் இளங்கோவன் மேலும் கூறினார்

English summary
EVKS Elangovan spoke to the reporters after meeting Sonia Gandhi in Delhi. He says that DMK and Congress alliance is strong.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X