ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: நாளை வேட்பு மனு தாக்கல் துவக்கம்.. காங். வேட்பாளர் பட்டியல் எப்போது?
டெல்லி: ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் தேதி நெருங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஒரே கட்டமாக டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்கள் தேர்வில் இறுதி கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 12ம் தேதியே வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட உள்ளதாம்.

[குழி தோண்டுவது, குண்டு வைப்பது, மக்களை தாக்குவது.. சட்டிஸ்கர் தேர்தலை நிறுத்த நக்சல்கள் சதி! ]
முதல்கட்டமாக 100 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட உள்ளதாக எதிர்பார்ப்பு உள்ளது. பெரும்பாலும் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய நவம்பர் 19ம் தேதி கடைசி நாளாகும். எனவே நவம்பர் 16ம் தேதிக்குள் வேட்பாளர்களின் முழு பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரசின் மத்திய தேர்தல் கமிட்டி இந்த பெயர்களை இறுதி செய்யும். 160 பெயர்கள் இப்போதே தயாராக இருந்தபோதிலும், கோஷ்டி பூசல் காரணமாக, பெயர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விருப்பம். எனவே கடந்த தேர்தலை விட இம்முறை அதிக அளவில் அப்பிரிவினருக்கு டிக்கெட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications