மோடிதான் ஹீரோ.. 17 மாநிலங்களில் காங்கிரஸ்க்கு பூஜ்ஜியம்.. கொட்டித்தீர்த்த அமித்ஷா!
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த வெற்றியின் ஹீரோ மோடிதான் என புகழ்ந்து தள்ளியுள்ளார் அமித்ஷா. அதேநேரத்தில் 17 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜியம் கிடைத்துள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடளுமன்றத்துக்கான லோக் சபா தேர்தலில் பாஜக இமாலய வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார்.
பிரதமர் மோடியின் வெற்றிக்கு பாஜக மூத்த தலைவர்களான அத்வானி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஷ்ய அதிபர் புடின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், மற்றும் பூடான், சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உற்சாக வரவேற்பு
இந்நிலையில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலத்தில் தொண்டர்களை சந்தித்தனர். அப்போது தலைமையகத்தில் மலர்கள் தூவி பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காங்.குறித்து விமர்சனம்
இதைத்தொடர்ந்து பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளினார். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டணியை தகர்த்துள்ளோம்; வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியின் கதாநாயகன் மோடியே

பெரிய பூஜ்ஜியம்
17 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரிய பூஜ்ஜியத்தை பெற்றுள்ளது. பல தொல்லைகளை தாண்டி மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.

அமித் ஷா வாழ்த்து
மேலும் ஒடிசாவில் வெற்றி பெற்ற நவீன்பட்நாயக், சிக்கிமில் வென்ற பவன்குமார் சாம்லிங்குக்கு வாழ்த்து தெரிவித்த அமித்ஷா ஆந்திராவில் வெற்றி பெற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கும் வாழ்த்துக்களை கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications