"தலைவராக இருப்பார் சசிகாந்த் செந்தில்".. ஹரியானா - காஷ்மீர் காங்கிரஸ் வியூகம்! களமிறங்கிய வார்ரூம் தலைகள்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபைகளுக்கான தேர்தல் தேதிகள் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த மாநிலங்களுக்கான வார் ரூம் தலைவர்களை காங்கிரஸ் நியமித்திருக்கிறது. தேசிய வார் ரூம் தலைவராக சசிகாந்த் செந்தில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது தேர்தல் நடத்தப்படுவதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
2ம் கட்ட தேர்தல்: இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
3ம் கட்ட தேர்தல்: மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.
ஹரியானா: அதேபோல ஹரியானாவின் தற்போதைய பாஜக அரசின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ஹரியானாவுக்கு அக்.1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.16 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். ஒரே கட்டமாக பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநில அரசின் பதவி காலமும் விரைவில் முடிவடைய இருக்கிறது. ஆனால் அம்மாநிலத்திற்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இப்படி இருக்கையில் காங்கிரஸ் கட்சி இந்த மூன்று மாநிலங்களுக்குமான தேர்தல் வார் ரூம் தலைவர்களை நியமித்திருக்கிறது. அதன்படி ஜம்மு காஷ்மீர் தேர்தல் வார் ரூம் தலைவராக கோகுல் புட்டைலும், ஹரியானாவுக்கு நவீன் சர்மாவும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செல்லா வம்சி சந்த் ரெட்டியும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தேசிய வார் ரூம் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிக்கு வார் ரூம்கள் பெரிதும் கைக்கொடுக்கின்றன. மக்களின் மனநிலை, வாக்காளர்களின் விருப்பு வெறுப்புகள், தொகுதியில் எந்தெந்த சமூகத்தினர் அதிகம் இருக்கின்றனர், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை, உணர்வுப்பூர்வமான கோரிக்கை என என்ன செய்தால் மக்களின் மனங்களை தொட முடியும்? அதை எப்படி வாக்குகளாக மாற்றமுடியும் என்கிற யுக்தியை வார் ரூம்கள்தான் வகுக்கிறது.
இப்படியாக தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, இரு மாநிலத்திற்கும் வார் ரூம் தலைவராக சசிகாந்த் செந்தில்தான் நியமிக்கப்பட்டிருந்தார். இரு மாநிலத்திலும் விரிவாக ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் யுக்திகள் வகுக்கப்பட்டு அதனை காங்கிரஸ் பின்பற்றியது. இதில் கட்சி பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து மக்களவை தேர்தலின்போது சசிகாந்த் செந்தில் காங்கிரஸின் தேசிய வார் ரூம் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தற்போது இந்த பொறுப்பு தொடர்வதாக காங்கிரஸ் தலைமை அறிவித்திருக்கிறது. தெலங்கானா, கர்நாடகாவை போல மேற்குறிப்பிட்ட மூன்று மாநிலங்களுக்கும் வலுவான வெற்றி யுக்திகளை சசிகாந்த் செந்தில் வகுப்பார் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
-
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications