ஒரு மாதத்துக்கு டிவி பக்கமே வர மாட்டோம்.. காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
டிவி விவாதங்களில் ஒரு மாசத்துக்கு பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது
Recommended Video
டெல்லி: ஒரு மாதத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் டிவி விவாதங்களில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த முறை பெற்றதை விட கூடுதல் எண்ணிக்கையில் ஜெயித்தது மட்டுமே ஆறுதல். அப்படியும் கூட எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காத பரிதாப நிலை தொடர்கிறது.
இந்த பெரும் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி விரும்புகிறார். விருப்பத்தையும் தெரிவித்து விட்டார். யாரையும் சந்திக்காமல் இருந்து வருகிறார்.

தெலுங்கானா
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அகில இந்திய அளவில் அது வலுவான கூட்டணியை ஏற்படுத்தத் தவறி விட்டது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அதன் கூட்டணி அணுகுமுறை பெரும் தவறிழைத்து விட்டது. அதேபோலத்தான் ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களிலும் அது சரிவர செயல்படவில்லை.

மிகபெரிய வெற்றி
காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறைகள் ஒரு பக்கம் இருந்தால், அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகள் பிரதமர் கனவோடு வலம் வந்ததால் மக்கள் வெறுப்படைந்து பாஜகவுக்கு குத்தி விட்டனர். இதனால்தான் பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்று விட்டது.

முக்கிய முடிவு
தனது பெரும் தோல்விக்கான காரணத்தையும், சுய பரிசோதனையிலும் தற்போது காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. ஒருபக்கம் ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. மறுபக்கம் தவறுகளை சரி செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

டிவி விவாதங்கள்
ஒரு மாதத்திற்கு டிவி விவாதங்களில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்து அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள டிவீட்டில், ஒரு மாதத்திற்கு டிவி விவாதங்களில் எங்களது செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். எனவே அனைத்து மீடியா சேனல்கள், ஆசிரியர்கள், எங்களது பிரதிநிதிகளை டிவி ஷோக்களுக்கு அழைக்க வேண்டாம் என்று கேட்டுள்ளார்.

தவிர்ப்பு
டிவி விவாதங்களில் கலந்து கொண்டு தேவையில்லாமல் எதையாவது பேசி மேலும் சர்ச்சை மற்றும் சிக்கலை ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் முகமாகவே இப்படி ஒரு முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அதுவும் சரிதான். இப்பவெல்லாம் டிவி விவாதங்களில் சும்மாவா இருக்கிறார்கள். எதையாவது நோண்டி வாயிலிருந்து பிடுங்காமல் விடுவதில்லையே.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications