டெல்லி தேர்தலுக்கு காங்கிரஸ் வகுத்த புதிய வியூகம்! கைகொடுக்குமா.. காலை வாருமா?
டெல்லி: விரைவில் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வெற்றிக்காக கட்சி புதிய வியூகங்களை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியை 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட அனுபவம் காங்கிரஸுக்கு இருக்கிறது. ஆனால் அதெல்லாம் 2008ம் ஆண்டுடோடு முடிவுக்கு வந்துவிட்டது. மீண்டும் ஆட்சியை பிடிக்க படாது பாடு பட்டுக்கொண்டிருக்கிறது கட்சி. இந்நிலையில் இந்த தேர்தலிலாவது ஓட்டை தேற்றி, ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பார்த்தால், களம் பாஜக vs ஆம் ஆத்மி என்றுதான் இருக்கிறது. எனவே இதையெல்லாம் பார்த்த காங்கிரஸ், அதிரடி வியூகத்துடன் உள்ளே இறங்கியுள்ளது.

அதாவது சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது என்பதுதான் இந்த திட்டம். ஓக்லா, சீலம்பூர், பாபர்பூர், முஸ்தபாபாத், மதியா மஹால், பல்லிமறன், சாந்தனி சௌக், கஸ்துபாநகர், பட்லி, புது தில்லி, நங்லோய் ஜாட், சத்தர்பூர் மற்றும் பட்பர்கஞ்ச் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சிறுபான்மையினர், தலித் மக்கள் மற்றும் பூர்வாஞ்சல் சமூக மக்கள் அதிக அளவு இருக்கின்றனர். இந்த இடங்களில் தேர்தல் பிரசாரத்தை அதிகரிக்க கட்சி திட்டமிட்டிருக்கிறது.
குறிப்பாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரை இந்த பகுதிகளில் தீவிர பரப்புரை செய்ய வைக்க கட்சி முடிவெடுத்திருக்கிறது.
டெல்லியை பொறுத்தவரை அதன் பூர்வீக மக்களை விட, புலம்பெயர்ந்த மக்கள் தொகைதான் அதிகம். டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து, குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியானா, இமாச்சல், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில மக்கள் அதிக அளவில் டெல்லியில் வசிக்கின்றனர். இவர்கள் பூர்வாஞ்சல் சமூகத்தினர் என வகைப்படுத்தப்பட்டிருகின்றனர். டெல்லியின் அரசியலை தீர்மானிப்பதும் இந்த மக்கள்தான். மொத்தமுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் 35-40 தொகுதிகளில் இவர்கள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார்கள்.
கடந்த தேர்தலிலும் ஆம் ஆத்மி இவர்களைதான் பெரிதும் நம்பியிருந்தது. ஆனால் இந்த தேர்தலில் பாஜகவும், ஆம் ஆத்மியும் இவர்களை கவரும் அளவுக்கான வாக்குறுதிகளை போதிய அளவுக்கு கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த இடைவெளியைதான் தற்போது காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. அதாவது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பூர்வாஞ்சல் மக்களுக்கு என தனி பட்ஜெட் மற்றும் தனி நலத்துறையை உருவாக்குவோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டில் கொடுக்கப்படும் மகளிர் உரிமைத்தொகை போல, டெல்லியில் 'பியாரி திதி யோஜனா' என்கிற பெயரில் பெண்களுக்கு ரூ.2500 மாதம் வழங்குவோம் என்றும் காங்கிரஸ் உறுதி அளித்திருக்கிறது.
தவிர, டெல்லியில் அனைத்து குடும்பங்களுக்கும் ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. மேலும் இலவச ரேஷன், ரூ.500க்கு சிலிண்டர், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளையும் கொடுத்திருக்கிறது.
ஆனால் இவை எந்த அளவுக்கு தேர்தலில் பிரதிபலிக்கும் என்பது, முடிவுகள் வந்த பின்னர்தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications