புதிய நாடாளுமன்றத்தில் புகுந்த மழை நீர்.. ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்! காங்கிரஸ் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பெய்த கனமழை காரணமாக நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்தது. புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், எப்படி கட்டிடத்திற்குள் மழை நீர் புகுந்தது என்று எம்பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஆய்வு செய்ய காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், தென் மற்றும் வட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தேசிய தலைநகர் டெல்லியில்,

Delhi Parliament Rain

நேற்றிரவு ஒரு மணி நேரத்தில் மட்டும் 112.5 மி.மீ மழை பெய்திருக்கிறது. ஒரு மணி நேரத்தில் 112.5 மி.மீ என்பது மேகவெடிப்பின் போது பதிவாகும் மழையின் அளவாகும். ஆனால் டெல்லியில் மேகவெடிப்பு ஏற்படவில்லை. கனமழை காரணமாக டெல்லி முழுவதுமே வெள்ளத்தில் மூழ்கியது. டெல்லி நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை, மதுரா சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் தண்ணீர் முட்டியளவு தேங்கி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக நேற்றிரவு 7.30 முதல் 8.00 மணி வரை பத்து விமானங்கள் டெல்லி விமான நிலையத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. வெள்ளம் காரணமாக டெல்லியில் அதிகாரிகள் அனைவரும் நேற்று உஷார்படுத்தப்பட்டனர். கனமழைக்கு டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடமும் தப்பவில்லை.

மழை பெய்த கொஞ்ச நேரத்தில் நாடாளுமன்றத்தில் மழை நீர் சூழ்ந்தது. அதேபோல நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் மழைநீர் கசிந்தது. இதனை பிளாஸ்டி பக்கெட் வைத்து பிடித்து ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி பெரும் விமர்சனங்களை பெற்ற நிலையில் காங்கிரஸ் லோக்சபாவில் இது தொடர்பாக ஒத்தி வைப்பு தீர்மானத்தை கொடுத்திருக்கிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு ஒரு வருடம்தான் ஆகிறது. அதற்குள் எப்படி மழைநீர் கசிவு ஏற்பட்டிருக்கிறது? என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தை ஆய்வு செய்ய அனைத்து கட்சி எம்பிக்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை அவசர முக்கியத்தும் அளித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+