டிரெண்டாகும் ராகுல் வீடியோ! அம்பானி, அதானி குறித்து பேசாதவர்கள் யார்? காங்கிரஸ் கொடுத்த பதிலடி
டெல்லி: லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அம்பானி மற்றும் அதானியிடமிருந்து பணம் வாங்கிவிட்டதாகவும், எனவேதான் அவர்களை விமர்சிக்கவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இதற்கு ராகுலின் சமீபத்திய வீடியோக்களை வெளியிட்டு காங்கிரஸ் பதிலடி கொடுத்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், நேற்று மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் என 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
இந்நிலையில், சமீபத்திய தேர்தல் பிரசாரங்களில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அம்பானி மற்றும் அதானியிடமிருந்து பணம் வாங்கிவிட்டதாகவும், எனவேதான் அவர்களை விமர்சிக்கவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, அம்பானி, அதானி குறித்து ராகுல் காந்தி பேசிய சமீபத்திய வீடியோக்களை வெளியிட்டிருக்கிறது.
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி இந்த குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அவர் பேசியதாவது, "கடந்த காலங்களில் அம்பானி மற்றும் அதானி குறித்து குற்றச்சாட்டுகளாக அடுக்கி வந்த காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) இப்போது அப்படி பேசுவதில்லை. அதிலும் குறிப்பாக தேர்தல் தொடங்கியதிலிருந்து இந்த இருவர்கள் மீதான விமர்சனங்களை அவர் வைப்பதில்லை.
ஏன் இந்த திடீர் மாற்றம்? இது குறித்து காங்கிரஸ் இளவரசரிடம் நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். அம்பானி, அதானி குறித்து பேசாமல் இருக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? காங்கிரஸ் கட்சி இவர்களிடமிருந்து தேர்தல் நிதியாக எத்தனை லாரிகளில் பணத்தை பெற்றீர்கள்? இது சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி விளக்கமளிக்க வேண்டியிருக்கிறது" என்று பேசியிருந்தார்.
सवाल तो हम पूछते रहेंगे- मोदी का अडानी से क्या रिश्ता है? pic.twitter.com/bXK7jYT318
— Congress (@INCIndia) May 8, 2024
இதனையடுத்து காங்கிரஸ் இவரது பேச்சுக்கு, ராகுல் காந்தியின் வீடியோக்களை வெளியிட்டு பதிலடி கொடுத்திருக்கிறது. இந்த வீடியோவில் மே மாதம் 2ம் தேதி கர்நாடகாவில், மே 3ம் தேதி மகாராஷ்டிராவில், 5ம் தேதி தெலங்கானாவில், 6ம் தேதி மத்தியப் பிரதேசத்தில், 7ம் தேதி ஜார்க்கண்டில் என அம்பானி மற்றம் அதானி குறித்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
அதேபோல மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கும் நிலையில், தனது குழந்தைகளை போல கருதிய அம்பானி-அதானிக்கு எதிராக மோடி பேச தொடங்கியுள்ளார் என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார். மேலும், "நாம் இருவர், நமக்கிருவர் என இருந்த நிலை மாறி அம்பானி, அதானியை குறை சொல்லும் அளவுக்கு தேர்தல் சூழல் மாறியிருக்கிறது. மோடியின் வீழ்ச்சி உறுதியாகிவிட்டது. சொந்த நிழல் கூட அவரை பயமுறுத்த தொடங்கியுள்ளது" என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் மற்றொருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications