இந்தியாவுக்கு எங்களை தான் பிடிக்கும்..எத்தனை லைக் கிடைச்சிருக்கு பாருங்க? டேட்டாவுடன் வந்த காங்கிரஸ்
டெல்லி: லோக்சபா தேர்தல் 2024 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பாஜகவே 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் பாஜகவை வித்தியாசமாக கலாய்த்து உள்ளது காங்கிரஸ்..
இந்தியாவின் 18 வது மக்களவைக்கு 543 மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தொடங்கி நேற்று வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.

பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் நேற்று காலை 7:00 மணிக்கு தொடங்கிய ஏழாம் கட்ட வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது .
அதனைத் தொடர்ந்து 6.30 மணி அளவில் இந்தியாவின் பல்வேறு முன்னணி செய்தி நிறுவனங்கள் பொதுமக்களிடம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் பெரும்பாலான நிறுவனங்களின் கணிப்பு பாஜகவே மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் 350 தொகுதிகளில் இருந்து 400 தொகுதிகள் வரை பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்றே கூறியிருந்தன.
மேலும் 125 லிருந்து 175 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என ஊடகங்கள் கணித்திருக்கின்றன அதே நேரத்தில் ஒரு சில ஊடகங்கள் 300 தொகுதிகளுக்கு மேல் பெற்று காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனக் கூறியிருக்கின்றன. இந்நிலையில் கருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதை காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. மேலும் தேர்தல் முடிவுகள் தான் ஆட்சியமைப்பதை தீர்மானிக்கும் எனவும், முடிவுகள் வரை காத்திருக்க வேண்டுமென அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் பாஜகவை வித்தியாசமாக கலாய்த்து உள்ளது காங்கிரஸ். பாஜக 700 தொகுதிகளுக்கு மேல் கூட வெல்லும் அதன் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,: 🇮🇳 𝐈𝐧𝐝𝐢𝐚 𝐋𝐢𝐤𝐞𝐬 𝐂𝐨𝐧𝐠𝐫𝐞𝐬𝐬 ✋" என்ற பெயரில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் சமூக வலைதளங்களில் காங்கிரஸுக்கு பாஜகவை விட அதிக லைக்ஸ் கிடைத்துள்ளது என தகவல்கள் உள்ளது.
பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒவ்வொரு பதிவுக்கும் சராசரியாக 260 முதல் 300 லைக்குகள் மட்டுமே கிடைக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 2500 முதல் 3000 லைக்குகள் கிடைப்பதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாஜகவுக்கு 26 ஆயிரத்து 945 லைக்குகள் கிடைக்கும் நிலையில் காங்கிரஸின் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் ஒரு லட்சத்து 22,000 லைட்டுகள் கிடைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல பாஜகவுக்கு பேஸ்புக் பக்கத்தில் சராசரியாக 150 முதல் 250 லைக்குகள் கிடைக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 1200 முதல் 1500 லைக்குகள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக 200 முதல் 300 தொகுதிகள் வரை வெல்லும் என குறிப்பிட்டு இருக்கும் நிலையில் அதனை கலாய்ப்பது போல காங்கிரஸ் கட்சி தங்களுக்கு கிடைக்கும் லைக்குகளின் எண்ணிக்கையை வைத்து தற்போது இந்த போஸ்டை போட்டு இருக்கிறது. இதனிடைஇயே நெட்டிசன்கள் இரு கட்சிகளையுமே விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications