Election Exclusive: நாமதான் கிங் மேக்கர்! தவெக, திமுக குடுமி நம்ம கையில்! ராகுலிடம் சொன்ன காங்கிரஸ் தலை! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் மேலிடக் கூட்டம் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக-காங்கிரஸ் இடையிலான பத்தாண்டு கால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கைகோர்ப்பதா என்பது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது.

congress

தற்போது நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலையை வலுப்படுத்துவது குறித்து காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

50 இடங்கள் அல்லது தவெக: தலைவர்களின் புதிய யோசனை

கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒரு தரப்பினர், முக்கியமாக குறிப்பிட்ட தலைவர் ஒருவர்.. முக்கியமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (TVK) ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள், மேலிடத்திற்கு ஒரு துணிச்சலான பரிந்துரையை முன்வைத்துள்ளனர்.

அவர்கள் முன்வைத்த முக்கிய வாதங்கள் இதோ:

திமுகவிடம் 50+ இடங்கள்: திமுக கூட்டணியில் நீடிப்பதாக இருந்தால், வரவிருக்கும் தேர்தலில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளைக் காங்கிரஸ் கேட்டுப் பெற வேண்டும்.

தவெக-வுடன் கூட்டணி: திமுக அதிக இடங்களை ஒதுக்க மறுத்தால், நடிகர் விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என ஒரு தரப்பு வலியுறுத்தியுள்ளது.

"தொங்கு சட்டசபை" மற்றும் "கிங் மேக்கர்" கனவு

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத "தொங்கு சட்டசபை" (Hung Assembly) சூழலை உருவாக்கும் என்று சில தலைவர்கள் மேலிடத்திடம் கணித்துக் கூறியுள்ளனர்.

"தமிழகத்தில் 2026-ல் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தச் சூழலில், காங்கிரஸ் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களை வென்றால் மட்டுமே, நாம் 'கிங் மேக்கராக' உருவெடுக்க முடியும். அப்போதுதான் ஆட்சியில் அதிகாரப் பகிர்வையும் (Coalition Government) நம்மால் உறுதி செய்ய முடியும்," என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாம் 50 இடங்களில் வென்றுவிட்டால்.. திமுக, தவெக குடுமி நம்ம கையில் இருக்கும் என்று கூறி உள்ளனராம். கடந்த சில தேர்தல்களாக திமுகவின் தயவிலேயே குறைந்த இடங்களில் போட்டியிடுவதால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், அதிகாரத்தில் பங்கு பெறாதது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்துவதாகவும் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலிடத்தின் பதில் என்ன?

தமிழகத் தலைவர்களின் இந்த அதிரடிப் புகார்கள் மற்றும் பரிந்துரைகளைக் கேட்ட ராகுல் காந்தி மற்றும் கார்கே, தற்போதைய அரசியல் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் இளைஞர்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அவர்கள் மறுக்கவில்லை.

இருப்பினும், தேசிய அளவில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியின் ஒற்றுமையையும் கருத்தில் கொண்டு காங்கிரஸ் மேலிடம் இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டம் இன்று மாலை முடிவடையும் போது, தமிழக காங்கிரஸின் அடுத்தகட்ட நகர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+