மம்தா பானர்ஜியை நம்ப மாட்டோம்.. பாஜக பக்கம் கூட சாய்வார்.. குறுக்கே கட்டையைப் போட்ட காங்கிரஸ்!
டெல்லி: மம்தா பானர்ஜி தேர்தலுக்குப் பின் பாஜக பக்கம் கூட சாய்வார், இந்தியா கூட்டணி வென்றால் வெளியில் இருந்து ஆதரவு என மம்தா கூறுவதை நம்ப மாட்டோம் என காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. 4 கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கக்கூடாது என்பதற்காக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணியை உருவாக்கின. திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகள் என பல கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெறிருந்தன. இவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் தொகுதி உடன்பாட்டில் மம்தா பானர்ஜி - காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். இதனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக இந்தியா கூட்டணி என்ற மும்முனை போட்டி உள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 லோக்சபா சீட்கள் உள்ளன. ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் இதுவரை 18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 24 தொகுதிகளுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியை அமைக்கும். அதற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம். பாஜக 195 சீட்களுக்கு மேல் பெறாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பது பிரதமர் மோடிக்கே தெரியும். இந்தியா கூட்டணி சார்பில் பிரதமராக ராகுல் காந்தியை முன்னிறுத்த கோரிக்கை வைப்போம்.
கூட்டணியை விட்டு வெளியேறிய மம்தா பானர்ஜி தேர்தலுக்கு பின் பாஜக பக்கம் கூட சாய்வார். இந்தியா கூட்டணி வென்றால் வெளியில் இருந்து ஆதரவு என மம்தா கூறுவதை நாங்கள் நம்ப மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள்












Click it and Unblock the Notifications