50 வயது பெண்ணுக்கு "பிளையிங்" கிஸ் கொடுத்து ராகுல் என்ன பண்ண போகிறார்! காங். தலைவர் சர்ச்சை பேச்சு
டெல்லி: ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பிளையிங் கிஸ் கொடுத்ததாக பெரிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக "இந்தியா" கூட்டணி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த மூன்று நாட்களாக நடந்து நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது.

இடையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதம் நடந்த போது ராகுல் காந்தி பெண் எம்பிக்களை நோக்கி பிளையிங் கிஸ் கொடுத்தாக சர்ச்சை எழுந்தது. இதனிடையே இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சர்ச்சை: ராகுல் காந்தியின் பிளையிங் கிஸ் விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், பீகாரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ நீது சிங் என்பவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை நக்கலடிக்கும் விதமாகக் கூறிய சில கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பின. இளம்பெண்கள் இருக்கும் போது 50 வயது பெண்ணுக்கு ராகுல் காந்தி ஏன் பிளையிங் கிஸ் கொடுக்கப் போகிறார் என்று நீது சிங் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இப்போது டிரெண்டாகி வருகிறது.
ராகுல் காந்தியின் இமேஜிற்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பாஜகவினர் திட்டமிட்டு இப்படிச் செய்து வருவதாகவும் காங்கிரஸ் எம்எல்ஏ நீது சிங் சாடியுள்ளார். நீது சிங் பீகாரில் உள்ள ஹிசுவா சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
50 வயது பெண்: இது தொடர்பாக நீது சிங் வெளியிட்டுள்ள வீடியோவில், "ராகுல் காந்திக்கு பெண் ரசிகர்களுக்காகப் பஞ்சம்? பிளையிங் கிஸ் கொடுக்க வேண்டும் என்றால் ராகுல் காந்தி இளம்பெண்ணுக்கே கொடுக்கலாம்.. அவர் ஏன் ஸ்மிருதி இரானி போன்ற 50 வயது பெண்ணுக்கு பிளையிங் கிஸ் கொடுக்க போகிறார்.. ராகுல் காந்தி மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. அவரது இமேஜிற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
நீது சிங்கின் இந்தக் கருத்துகள் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நீது சிங்கின் இந்த பேச்சைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், ஸ்மிருதி இரானி குறித்து அவர் பேசிய கருத்துகள் வெட்கக்கேடானது என்றும் சாடியுள்ளார்.

பாஜக கடும் தாக்கு: பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலாவும் இந்தக் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான ஒரு கட்சி என்று விமர்சித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, காங்கிரஸ் கட்சியினர் தலைவர் ராகுல் காந்தியைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதையே இது காட்டுவதாகவும் சாடினார்.
கடந்த புதன்கிழமை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பிளையிங் கிஸ் கொடுத்ததாக ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டினார். ராகுல் காந்திக்குப் பெண்கள் மீது மரியாதை இல்லை என்றும் இதுபோன்ற அநாகரீகமான செயலை இந்த சபை பார்த்ததில்லை என்றும் விமர்சித்தார். இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பெண் எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
மேலும், 20க்கும் மேற்பட்ட பாஜக பெண் எம்பிக்கள் கையொப்பமிட்ட புகாரும் அளிக்கப்பட்டது. அதில் ராகுல் காந்தி அநாகரீகமான சைகை காட்டியதாகவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து பிளையிங் கிஸ் கொடுத்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், இதுதான் அவர்களின் கலாச்சாரம் என்று அவர்கள் சாடினர்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications