Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்லிம், தாலி பற்றியெல்லாம் பேசுகிறாரே.. மேக் இன் இந்தியா பற்றி மோடி ஏன் பேசுவதில்லை? கார்கே கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா தொடர்ச்சியாக வர்த்தக பற்றாக்குறையால் தவித்து வருகிறது என பொருளாதார வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், முகலாயர்கள், தாலி குறித்தெல்லாம் பேசும் பிரதமர் மோடி, ஏன் பொருளாதாரம் குறித்து பேசுவதில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

பொருளாதார வல்லுநர்கள் நமது நாட்டின் வர்த்தக வளர்ச்சி குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்று கூறி வருகின்றனர். வர்த்தக பற்றாக்குறை என்றால் ஏதோ புரியாத விஷயம் என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இதை புரிந்து கொள்வது எளிமையானது.

Congress leader Mallikarjun Kharge criticized India s growing trade deficit

ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையே உள்ள இடைவெளிதான் வர்த்தக பற்றாக்குறை. ஒரு நாட்டில் ஏற்றுமதிக்காக செலவிடப்படும் பணத்தை விட இறக்குமதிக்காக செலவிடப்படும் பணம் அதிகமாக இருந்தால் வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது.

சீனா vs அமெரிக்கா: குறிப்பாக 2023-2024ம் ஆண்டில் சீனா, ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் கொரியா நாடுகள் என 10 நாடுகளுடன் இந்தியாவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதாவது இந்த நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு பதில் அங்கிருந்து அதிக அளவில் இறக்குமதிகள் நடக்கின்றன. இதற்காக நாம் அதிகம் செலவழிக்கிறோம்.

2022-23 உடன் ஒப்பிடும்போது சீனா, ரஷ்யா, கொரியா மற்றும் ஹாங்காங் உடனான வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் ஈராக் உடனான வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன. அதே நேரம் அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய பங்காளியாக உருவெடுத்துள்ளது.

இதனை குறிப்பிட்டு, முகலாயர்கள், தாலி குறித்தெல்லாம் பேசும் பிரதமர் மோடி, ஏன் பொருளாதாரம் குறித்து பேசுவதில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது x தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "தாலி, முகலாயர்கள் பற்றி பேசும் மோடி ஏன் மேக் இன் இந்தியா திட்டம் பற்றி பேசவில்லை. தனது தேர்தல் பரப்புரையில் ஏன் பொருளாதாரம் குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார். ஏனெனில் அவரது அரசு மோசமான தோல்வியில் இருக்கிறது.

காங்கிரஸ் vs பாஜக: மேக் இன் இந்தியா, பிஎல்ஐ திட்டம் தோல்வியடைந்தது. ஏற்றுமதிகள் முழுவதுமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தி வளர்ச்சி குறித்த ஒப்பீட்டை பாருங்கள்

காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசாங்கத்தின் 2004-2014 என 10 ஆண்டுகளில் 7.85 சதவிகிதமாக வளர்ச்சி இருந்துள்ளது. அதே பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கத்தின் தலைமையிலான 2014-2022 என 10 ஆண்டுகளில் 6.0 சதவிகிதம்தான் வளர்ச்சி இருந்திருக்கிறது.

ஏற்றுமதி வளர்ச்சியை பொறுத்த அளவில், காங்கிரஸின் இரண்டு 5 ஆண்டுகள். அதாவது, 2004-2010 வரை 186.59 சதவிகிதமாகவும், 2009-2014 வரையிலான இரண்டாவது 5 ஆண்டில் 94.39 சதவிகிதமாகவும் ஏற்றுமதி வளர்ச்சி இருந்தது.

இதே 2014-2020 மற்றம் 2019-2024 என 10 ஆண்டுகளில் தலா 21.14 சதவிகிதமும், 56.86 சதவிகிதமும் தான் ஏற்றுமதி வளர்ச்சி இருந்திருக்கிறது. சீனாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதிகள் நடக்கின்றன. கால்வானில் நமது வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி அளித்த சின்ன கிஃப்ட் இது.

அதேபோல 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 3.32 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த சீனாவின் இறக்குமதி மதிப்பு, அதே ஆண்டில் ஜூலை மாதத்தில் 5.58 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. அதாவது ஒரே மாதத்தில் 68 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இன்னும் எளிமையாக சொல்வதெனில், இந்தியாவின் சீன ஏற்றுமதிக்கும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்கு இடையேயான வித்தியாசம், கடந்த ஆண்டு மட்டும் ரூ.7 லட்சம் கோடி அதிகம்.

மோடியின் ஆட்சியில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 194.19% அதிகரித்துள்ளது. 2013-2014ம் ஆண்டில், காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ரூ.8.1 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், 2023-2024ம் ஆண்டில் பாஜக ஆட்சியில் இது ரூ.23.83 லட்சம் கோடியாக இருக்கிறது.

பயோலாஜிகலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று மோடி கூறி வருகிறார். நாம் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால், பாஜகவை வெளியேற்றிவிட்டு இந்தியாவுக்கு (கூட்டணிக்கு) வாக்களிப்பதுதான்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+